29 November 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே. 

                     -திருமூலர்  (10-3-12,11)


பொருள்: பிராணாயாம வன்மையால் தலையில் உள்ள அமுதத்தைப் பெற்று மிகவும் நுகர வல்லீராயின், உமக்கு உடம்பாய் அமைந்த, நிலம், நீர் முதலிய தத்துவங்கள் பலவும் அவை யவை ஒடுங்கும் முறையில், வலிமை கெட்டு ஒடுங்குதற்குத் தனித்தனிப் பல்லாண்டுக் காலம் செல்லும்; அங்ஙனம் செல்லவே, உடம்பு கெட் டொழியாது, நெடுநாள் நிலைத்து நிற்கும்; இஃது எங்கள் அருளாசிரி யரான நந்தி தேவர்மேல் ஆணையாக நான் சொல்லும் உண்மை.

27 November 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டு முடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே

               -சுந்தரர்  (7-81-3)


பொருள்: உலகீர் , நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து , முழுதும் ஒழிதற்பொருட்டு , தோள்கள் எட்டினையும் உடைய , சிறந்த மாணிக்கம்போலும் ஒளியை யுடையவனாகிய , நஞ்சணிந்த கண்டத்தை உடையவன் எழுந்தருளியிருக்கின்ற , குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை , நாள்தோறும் , முறைப்படி , நெடிது நின்று வழிபடுமின்கள்

20 November 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கைத்தலை மான்மறி யேந்திய கையன் கனன்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு வேதிகுடி
அத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

                   -திருநாவுக்கரசர்  (4-90-2)


பொருள்: கைகளில் மான்குட்டியையும் கொடிய மழுப் படையையும் ஏந்தி , மண்டையோட்டைத் தாங்கித் திருநீற்றை அணிந்து பொய்த் தலை கொண்டு பிச்சைக்காகத் திரிபவனும் , வயல்களிலே வாளை மீன்கள் தாவித் துள்ளும் திருவேதிகுடிப் பெருமானும் ஆகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் நாம் .

16 November 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவ மணிந்தானை யணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

                     -திருஞானசம்பந்தர்  (1-88-2)


பொருள்: குராமலர் மணம் கமழும் கூந்தலையுடைய உமை யம்மை விளங்கும் திருமேனியோடு தேவர்கள் கூடி வணங்கத் திருஆப்பனூரில் விளங்கும் சிவபிரானைப் பரவும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

15 November 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நீடுதிருத் தூங்கானை
மாடத்து நிலவுகின்ற
ஆடகமே ருச்சிலையான்
அருளாலோர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே
வாகீசர் திருத்தோளில்
சேடுயர்மூ விலைச்சூலம்
சினவிடையி னுடன்சாத்த.

           -திருநாவுக்கரசர் புராணம்  (152)


பொருள்: செல்வம் நிலைபெறும் திருத்தூங்கானை மாடத்தில் நிலவும் பொன்னான மேருமலையை வில்லாக உடைய பெருமானின் திருவருளால், ஒரு சிவ பூதமானது, அருகிலுள்ளார் யாரும் அறியாதவாறு வந்து, திருநாவுக்கரசரின் திருத்தோள்களில் ஒளி மிக்க மூவிலைச்சூலக் குறியைச் சினமுடைய ஆனேற்றின் குறியுடனே சாத்த,

13 November 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே. 

                   -திருமூலர்  (10-3-11,14)


பொருள்: சிறப்பால் தம்முள் ஒத்தனவாகிய, தனஞ்சயன் ஒழிந்த ஏனை வாயுக்கள் ஒன்பதும் வேறு வேறு நின்று செயற்படுவன. சிறப்பால் அவ்வொன்பதிலும் மேம்பட்டது `தனஞ்சயன்` என்னும் வாயு. அஃது ஏனை ஒன்பது வாயுக்களினும் ஒப்பக் கலந்து, அவற் றிற்கு வன்மையைத் தந்து நிற்கும். அஃது அவ்வாறு நிற்பதனாலே உயிரும், உடம்பும் இணங்கியிருக்கின்றன

12 November 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறை கீளும்
கடமார்களி யானையுரி
யணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
திடமாஉறை கின்றான்திருக்
கேதீச்சரத் தானே

         - (சுந்தரர் 7-80-2)


பொருள்: சுடப்பட்ட நுண்ணிய பொடியாகிய நீற்றையும் , நல்ல பிளவாகிய பிறையையும் , கீளினையும் , மதம் நிறைந்த மயக்கத்தையுடைய , யானையினது தோலையும் அணிந்த கறுத்த கண்டத்தை உடையவனாகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் , பாலாவி யாற்றின் கரைமேல் , பாம்பு போலும் இடை யினையுடைய மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான் .

09 November 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும்
மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான்
மைம்மலர் நீல நிறங்கருங் கண்ணியோர்  பான்மகிழ்ந்தான்
நின்மல னாட னிலயநெய்த் தானத் திருந்தவனே. 

                      -திருநாவுக்கரசர்  (4-89-5)


பொருள்: கொய்ந்த  கொன்றை மலர், துழாய், வன்னி, ஊமத்தம்பூ, வில்வம் ஏனைய சிறந்த மலர்கள் இவற்றை அணிந்த விரிந்த சடைத் தொகுதியையுடைய தேவர் தலைவனாய், கருமை பரவிய நீல நிறத்தை உடையவளாய்க் கருங்கண்களை உடைய பார்வதி பாகனாய் உள்ள களங்கம் அற்ற தூயோனாகிய சிவபெருமான், தன் ஆடல்களுக்கு அரங்கமாக அமைந்த நெய்த்தானத்தில் இருப்பவனாவான்.

08 November 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


திருமா லடிவீழத் திசைநான் முகனாய
பெருமா னுணர்கில்லாப்பெருமா னெடுமுடிசேர்
செருமால் விடையூருஞ் செம்மான் றிசைவில்லா
அருமா வடுகூரி லாடும் மடிகளே.

                    -திருஞானசம்பந்தர்  (1-87-10)


பொருள்: எட்டுத் திசைகளிலும் ஒளிபரவுமாறு அரிய பெரிய வடுகூரில் நடனம் ஆடும் அடிகள், திருமால் தம் அடியை விரும்பித் தோண்டிச் செல்லவும், திசைக்கு ஒரு முகமாக நான்கு திருமுகங்களைக் கொண்ட பிரமனாகிய தலைவனும் அறிய முடியாத பெரிய முடியினை உடைய இறைவர், போர் செய்யத்தக்க விடைமீது எழுந்தருளிவரும் சிவந்தநிறத்தினர்.

05 November 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புல்லறிவிற் சமணர்க்காப்
பொல்லாங்கு புரிந்தொழுகும்
பல்லவனுந் தன்னுடைய
பழவினைப்பா சம்பறிய
அல்லல்ஒழிந் தங்கெய்தி
ஆண்டஅர சினைப்பணிந்து
வல்அமணர் தமைநீத்து
மழவிடையோன் தாளடைந்தான்.

               -திருநாவுக்கரசர் புராணம்  (145)


பொருள்: புல்லிய அறிவையுடைய சமணர்களுக்காகப் பெரும் தீங்குகளையே இடைவிடாது செய்துவருபவனாகிய மகேந்திர வர்மனாகிய பல்லவ மன்னனும், தன் பழவினைத் தொடர்பு நீங்கவே, அத்துன்பத்தினின்றும் நீங்கித் திருவதிகையை அடைந்து, ஆளுடைய அரசரை வணங்கி, வலியச் சமணர்களை விட்டு இளைய ஆனேற்றை யுடைய சிவபெருமானின் திருவடிகளைச் சாரும் நெறியாகிய சைவப் பெருநெறியைச் சேர்ந்தான்

02 November 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 


குரவன் அருளிற் குறிவழி மூலன்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

            - திருமூலர் (10-3-11,3)


பொருள்: யோக குருவின் அருளால் அவன் குறித்த முறைப் படியே மூலாதாரத்தை நோக்கி ஓடப் பார்க்கும் வாயு, அவ்வாறு ஓடாது சத்தித் தானமாகிய இலாடத்திற் சென்று சேரும் அரிய நேரத்தைப் பார்த்து, அவ்வாறு சேரும் வாயுவே துணையாகச் சாம்பவி யோகம் கேசரி யோகங்களைச் செய்வார்க்குப் பெரிய சிவகதி போலக் கிடைப்பது, எட்டாம் சித்தியாகிய வசித்துவமாம்.

31 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அப்போதுவந் துண்டீர்களுக்
கழையாதுமுன் னிருந்தேன்
எப்போதும்வந் துண்டால்எமை
எமர்கள்சுழி யாரோ
இப்போதுமக் கிதுவேதொழில்
என்றோடிஅக் கிளியைச்
செப்பேந்திள முலையாள்எறி
சீபர்ப்பத மலையே

                -சுந்தரர்  (7-79-7)


பொருள்: தினைப்புனத்தைக் காக்கின்ற , கிண்ணம் போலும் , உயர்ந்து தோன்றும் , இளமையான தனங்களையுடைய குறமகள் , தினையை உண்ண வந்த கிளிகளைப் பார்த்து , ` முன்னே வந்து தினையை உண்ட உங்களுக்கு இரங்கி , உங்களை அதட்டாது அப்போது வாளா இருந்தேன் ; ஆயினும் , நீவிர் இடையறாது வந்து தினையை உண்டால் எங்களை , எங்கள் உறவினர் வெகுள மாட்டார் களோ ? ஆதலின் இப்போது உமக்குச் செய்யத் தக்க செயல் இதுதான் ` என்று சொல்லி , அவைகளைக் கவணால் எறிகின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபெருமானது மலை .

29 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

               - திருநாவுக்கரசர் (4-88-2)


பொருள்: பழனத்து அரசே !  எல்லா  திசைகளையும் காக்கும் தேவர்கள் உன்னைச்சுற்றி நிற்கின்றனர் . நின் திருக்கோயில் வாயிலில் மற்றுமுள்ள தேவர்கள் நிற்கின்றனர் . திருமாலும் பிரமனும் வந்து உன் திருவடிக் கீழ்ப்பொருந்தி நின்று நீ இடும் கட்டளை யாது என்பதனை அறிய ஈடுபாட்டோடு நிற்கின்றனர் . இங்ஙனம் தேவர்கள் வழிபடக் காத்துக் கிடக்க வைக்கும் இயல்பினனாகிய நீ , அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக்கொண்டு அருள் செய்வாயாக .

26 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
ஏலுஞ் சுடுநீறு மென்பு மொளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்
ஆலும் வடுகூரி லாடும் மடிகளே.

                 -திருஞானசம்பந்தர்  (1-87-2)

 

பொருள்: பால், நறுமணம் மிக்க நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடி, பொருந்துவதான வெண்ணீறு, என்புமாலை ஆகியவற்றை ஒளிமல்க அணிந்து அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் அன்னங்கள் கூடி ஆரவாரிக்கும் வடுகூரில் நம் அடிகளாகிய இறைவர் மகிழ்வோடு ஆடுகின்றார்.

24 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அப்பெருங் கல்லும்அங்
கரசு மேல்கொளத்
தெப்பமாய் மிதத்தலில்
செறித்த பாசமும்
தப்பிய ததன்மிசை
இருந்த தாவில்சீர்
மெய்ப்பெருந் தொண்டனார்
விளங்கித் தோன்றினார்.

                    -திருநாவுக்கரசர் புராணம்  (128)


பொருள்: சொற்றுணை வேதியன்  என்ற பதிகம் பட ,அப்பெரிய கல்லும், அங்குத் திருநாவுக்கரசர் அதன்மீது வீற்றிருக்கத் தெப்பமாக மிதக்க, அவரது திருமேனியைப் பிணித்திருந்த கயிறும் அறுபட்டது. அக்கல்லாகிய தெப்பத்தின் மேல் வீற்றிருந்த கெடுதல் இல்லாத சிறப்பினையுடைய மெய்ப் பெரும் தொண்டரான நாவரசரும் விளங்கித் தோன்றினார்.

23 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

                   -திருமூலர்  (10-3-10,8)


பொருள்: தாத்துவிகங்களாகிய தனு, கரணம் புவனம், போகம் என்னும் அனைத்துப் பந்தங்களையும் கடந்தபின், அவற்றிற்கு நிரம்பிய காரணமாகிய தத்துவங்கள் ஏழனது இயல்பும் தன் அறிவிடத்தே இனிது விளங்கித் தோன்றவும், இடையறாது கிளைத்து வருகின்ற வினையாகிய காரணம் கெட்டொழியவும் அடைவுபடப் பயின்ற யோகத்தால் மறுமையில் தனது கடவுளோடு ஒப்ப இருத்தல், சமாதியாலே பெறத்தக்கதாம்.

22 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


புரமன் றயரப் பொருப்புவில்
லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த
வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
மிக்க தமியருக்கே.

            -திருக்கோவையார் (8-23,6)


பொருள்:  புரம்வருந்த அன்று பொருப்பாகிய வில்லை யேந்தி;  அயனையன்று சிரமரிந்த வனது பெரியபனி வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு;  தில்லையிற் சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று;  மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி; அன்றி உயிர்கவர வெகுண்டு;  வான் சரத்தைத் தருமாயின்; ஒக்கும்

19 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாவின்மிசை யரையன்னொடு
தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக்
கடியானடித் தொண்டன்
தேவன்திருக் கேதாரத்தை
ஊரன்னுரை செய்த
பாவின்றமிழ் வல்லார்பர
லோகத்திருப் பாரே

            - சுந்தரர் (7-78-10)


பொருள்: தமிழ்ப்பாடலைப் பாடிய திருநாவுக்கரசரும் , திரு ஞானசம்பந்தரும் , மற்றவர்களும்  , சிவனடியார்களுக்கு அடிய னாகி , அவர்கட்கு அடித்தொண்டு செய்பவனாகிய நம்பியாரூரன் , இறைவனது திருக்கேதாரத்தைப் பாடிய , இனிய தமிழ்ப் பாடலைப் பாட வல்லவர்கள் , எல்லாவற்றிற்கும் மேலுள்ள உலகமாகிய சிவ லோகத்தில் இருப்பவராவர் .

17 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அடுத்திருந் தாயரக் கன்முடி வாயொடு தோணெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

                     -திருநாவுக்கரசர்  (4-87-10)


பொருள்: பழனத்து அரசே ! இராவணன் கயிலையைப் பெயர்க்கத் தொடங்கும் வரையில் அருகிலேயே இருந்து அவன் செயற்பட்ட அளவில் அவனுடைய முடிகள் வாய் கண் தோள்கள் என்பன நெரிந்து சிதறுமாறு கால்விரலால் அழுத்தி அவன் செருக்கைக் கெடுத்தாய் . செருக்குற்று எழுந்தவருடைய வலிமையை அவர்களைச் சேர்ந்தவர்களுடைய வலிமையோடும் கெடுத்தாய் . புலித்தோலை ஆடையாக உடுத்துள்ளாய் . அத்தகைய நீ அடியேனையும் குறித்து மனத்துக் கொண்டு அருளுவாயாக .

16 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை


பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்ச மலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சு மடியார்கட் கில்லை யிடர்தானே.

                - திருஞானசம்பந்தர்  (1-86-10)


பொருள்: மயிற்பீலியாலாகிய குடை நீழலில் திரியும் சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பழி தூற்றுமாறு நின்ற பெருமானாய், நஞ்சு பொருந்திய கண்டத்தை உடைய நல்லூர்ப்பெருமானாய் விளங்கும் சிவபிரானை, ஏத்தும் அடியவர்களுக்கு இடரில்லை. 

15 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தண்டமிழ் மாலைகள் பாடித்
தம்பெரு மான்சர ணாகக்
கொண்ட கருத்தில் இருந்து
குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன்வல மாகச்
சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில்
எண்டிசை யோர்களுங் காண
இறைஞ்சி எழுந்தது வேழம்.

               -திருநாவுக்கரசர் புராணம்  (117)


பொருள்: தமிழ் மாலைகளைப் பாடித் தம் இறை வரையே சரணாகக் கொண்ட கருத்துடன் இருந்து விளங்கிய அன்பு பொருந்திய கொள்கையுடைய திருத்தொண்டரை,  வலமா கச் சுற்றி வந்து, எதிரில் தாழ்ந்து, எல்லாத் திக்குகளில் உள்ள வரும் காணும்படி அவ்யானை நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து நின்றது.

11 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை 


பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே. 

               -  திருமூலர்  (10-3-10,2)


பொருள்: சிவபிரானது திருவடியைத் துணையாகப் பற்றி அன்பு செய்து, அவனது புகழைக் கற்றும், கேட்டும் ஒரு பெற்றியே ஒழுகுவார்கட்கு, பின்னர், முனிவர் குழாம் முழுவதும் சுவர்க்க லோகத்தே முன்வந்து எதிர்கொள்ள ஒளிமயமாகிய அவ்வுலகத்தை அடைதல் கூடும்.

09 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
போலுந் திருநுதலே.

             -திருக்கோவையார் (8-22,2) 


பொருள்:  மிக்க விருப்புறுமவரை விண்ணோரினு மிகச் செய்து;பகைவர் மாய விதிர்க்கப்படுஞ் சூலவேலையுடையவனது தில்லையை யொக்குந் திருநுதால்!; பொருப்பைச்சேர்ந்த மயில்போல்வாய்;  தீயையுற்ற வெண்ணெயும் நீரையுற்றவுப்பும் போல; இவ்வாறுருகித் தனிமையுறாதொழி; அன்பர் போக்குப் பொய் அன்பர்போக்குப் பொய் என்றவாறு 

08 October 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


வாழ்வாவது மாயம்மிது
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங்
கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக்
கேதாரமெ னீரே

               - சுந்தரர் (7-78-1)

 

பொருள்: உலகீர் , பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய் ; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய் ; ஆதலின் , இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ; அதன் பொருட்டு , நீவிர் நீட்டியாது விரைந்து அறத்தைச் செய்ம்மின்கள் ; பெரிய கண்களையுடையவனாகிய திருமாலும் , மலரில் இருப்பவனாகிய பிரமனும் நிலத்தின் கீழும் , வானின்மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

03 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நஞ்சும்அமு தாம்எங்கள்
நாதனடி யார்க்கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார்
வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளக்குந்
திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த
பாலடிசில் மிசைந்திருந்தார்.

               -திருநாவுக்கரசர் புராணம்  (104)


பொருள்: சிறந்த சடையையுடைய சிவபெருமானுடைய சீர்களை உலகத்தில் விளக்கும் ஆற்றலுடைய நாவரசர், வஞ்சனை மிகுந்த மனமுடைய சமணர்களின் வஞ்சனையால் அமைக்கப்பட்டது என்பதை அறிந்தே, `எம் இறைவனின் அடியவர்க்கு நஞ்சும் அமுத மாகும்` என்ற உறுதிப்பாடு உடையவராய், கொடிய சமணர்களால் கொடுக்கப்பெற்ற நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டு யாதொரு குறை பாடும் இல்லாது இருந்தார்.

01 October 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

                  -திருமூலர்  (10-3-9,1)


 பொருள்: சமாதி என்னும் முடிவுநிலை, இயமம் முதலிய ஏனை உறுப்புக்களில் வழுவாது நிற்றலாலே வாய்ப்பதாம். இச்சமாதி யேயன்றி அட்டமாசித்திகளும், இயமம் முதலிய அவ்வுறுப்புக்களால் விளையும். இத்துணைச் சிறப்புடைய இயமம் முதலியவற்றை முற்றிச் சமாதியில் நிலைபெற்றவர்க்கேயன்றோ யோகம் முற்றுப்பெறுவது!

28 September 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக்
குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
வோவின்று சூழ்கின்றதே.

            -திருக்கோவையார்  (8-21,2)


பொருள்: பூவிற்றேனை யுடைய நெருங்கிய சுருண்ட குழலையுடையாய்;  சிறிய கண்ணினையும்;  பெரிய கையினையும்; திண்ணியகோட்டினையும்; குழைந்த செவியினையும்;  சிவந்த முகத்தினையு முடைய யானையினது வருத்தும் வளைப்புக்கெடக் குரவராற் பாதுகாக்கப்படு முற்காலத்து நம்மை யுய்வித்தவர்;  கருப்பு வில்லையுடையவனைச் சென்றுற்ற கண்ணிற்றீயை யுடையவனுறையும் அம்பலத்தை யுன்னாதாரைப் போல; இன்று சூழ்கின்றது இதுவோ கண்ணோட்ட மின்றித் தம்மல்ல தில்லாத இக்காலத்து நினைக்கின்றதிதுவோ! இது தகுமோ!

27 September 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கூசி அடியார் இருந்தாலுங்
குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
தேச வேந்தன் திருமாலும்
மலர்மேல் அயனுங் காண்கிலார்
தேசம் எங்கும் தெளிந்தாடத்
தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
வாசந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

                - சுந்தரர் (7-77-10)


பொருள்: நாடெங்கும் உள்ளவர்கள் ஐயமின்றி வந்து மூழ்குமாறு , தெளிந்த நீராகிய அருவியைக் கொணர்ந்து எங்கும் தங்குகின்ற அலைகளையுடைய காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள் , அடியார் தாம் தம் குறையைச் சொல்ல வெள்கியிருந்தாலும் , நீரும் அவர்தம் குறையை அறிந்து தீர்க்கும் குணம் சிறிதும் இல்லீர் ; அவ்வாறு தீர்த்தல் வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர் ; உம்மை , உலகிற்குத் தலைவனாகிய திருமாலும் , தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் என்னும் இவர்தாமும் காண்கிலர் ; பிறர் எங்ஙனங் காண்பார் ! ஓலம் !

26 September 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

                    - திருநாவுக்கரசர் (4-87-2)


பொருள்:  எட்டு  திசைகளையும் காக்கும் தேவர்கள் உன்னைச்சுற்றி நிற்கின்றனர் . நின் திருக்கோயில் வாயிலில் மற்றுமுள்ள தேவர்கள் நிற்கின்றனர் . திருமாலும் பிரமனும் வந்து உன் திருவடிக் கீழ்ப்பொருந்தி நின்று நீ இடும் கட்டளை யாது என்பதனை அறிய ஈடுபாட்டோடு நிற்கின்றனர் . இங்ஙனம் தேவர்கள் வழிபடக் காத்துக் கிடக்க வைக்கும் இயல்பினனாகிய நீ , அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக்கொண்டு பழனத்து அரசே ! அருள் செய்வாயாக .

25 September 2018

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை


ஏறி லெருதேறு மெழிலா யிழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்த ரவரென்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் மடியார்கட் கடையா குற்றமே.

                          -திருஞானசம்பந்தர்  (1-86-2)


பொருள்: எருதிலே ஏறுபவனும், உமையம்மையோடு ஒன்றாகவும் வேறாகவும் விளங்கும் தன்மையை உடையவனுமாகிய சிவபெருமான், அன்பர்கள் எண்ணுமாறு மணங்கமழும் மலர்ப் பொய்கை சூழ்ந்த நல்லூரில் விளங்குகின்றான். அப்பெருமான் புகழைக் கூறும் அடியவர்களைக் குற்றங்கள் அடையமாட்டார் .

24 September 2018

தினம் ஒரு திருமுறை


தினம்  ஒரு திருமுறை


ஆனந்த வெள்ளத்தின்
இடைமூழ்கி யம்பலவர்
தேனுந்து மலர்ப்பாதத்
தமுதுண்டு தெளிவெய்தி
ஊனந்தான் இலராகி
உவந்திருந்தார் தமைக்கண்டு
ஈனந்தங் கியதிலதாம்
என்னஅதி சயம்என்றார்.

            -திருநாவுக்கரசர் புராணம்  (101)


பொருள்: சிவானந்தப் பெருக்கினுள் மூழ்கி அம்பல வாணருடைய தேனைச் சொரியும் மலர் அனைய திருவடிகளின் அமுதத்தை உண்டு, தெளிவடைந்து, எவ்வகையான குறைபாடும் இல்லாதவராய், மகிழ்வுடன் வீற்றிருந்த திருநாவுக்கரசரைப் பார்த்து, `கெடுதி சிறிதும் அடைந்திலது! என்ன வியப்பு!` என்று சமணர் உரைத்தனர்.

21 September 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே. 

                -திருமூலர்  (10-3-8,2)


பொருள்: கண் முதலிய பொறியறிவின் சேர்க்கையால் நம்மைப் பண்படுத்தி நின்ற முதற்பொருள் ஒன்று உளது. அஃது, எல்லையற்ற பேரொளியாயினும், அதனை நாம் உள் நாக்கினை ஒட்டி உள்ள சிறிய துளை வழியில் சென்று காண்கின்ற ஒரு சிற்றொளியாகத் தரிசிக்கச் செய்தவாற்றால், `பாம்பு` எனப்படுகின்ற குண்டலி சத்தி நம்மை உய்வித்தது வியக்கத்தக்கது.

18 September 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கற்பா மதிற்றில்லைச் சிற்றம்
பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை
விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல்
லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித்
தாங்குக் குறுகியதே.

              -திருக்கோவையார்  (8-20,3)


பொருள்: கல்லாற் செய்யப்பட்ட பரந்த மதிலையுடைய தில்லைக்கட் சிற்றம்பலமதனைக் காதலித்த; வில்லாகச் செய்யப்பட்ட பரந்த மலையையுடைய எம்முடையகோனை விரும்பாதாரைப் போல; நம்மன்பர் சொல்லானியன்ற பாவாகிய நூல்களைக் கற்க விரும்பினாரென்று சொல்ல; அச்சொல் மெல்லோதியையுடையாளது செவிக்கண்; கொற்றொழில் பரந்த விளங்குமிலையையுடைய வேல் சென்று மூழ்கினாற்போலச் சென்றெய்திற்று;

17 September 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எங்கே போவே னாயிடினும்
அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை யொன்று மின்றியே
தலைநாள் கடைநா ளொக்கவே
கங்கை சடைமேற் கரந்தானே
கலைமான் மறியுங் கனல்மழுவும்
தங்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

             -சுந்தரர்  (7-77-2)


பொருள்: அடியேன் எங்கே செல்வேனாயினும் , முதல் நாளும் இறுதி நாளும் ஒரு பெற்றியவாக , சிறிதும் ஐயம் இன்றி , அங்கே வந்து என் மனத்தில் இருப்பீராய் , சடைமேற் கங்கையும் , கையில் மானின் ஆண் கன்றும் , சுடுகின்ற மழுவுமாய்த் தங்குகின்ற , அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக் கண் உள்ள திருவை யாற்றை உமதாக உடைய அடிகேள் ஓலம் !

14 September 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தருக்கின வாளரக் கன்முடி பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின வாறடி யேனைப் பிறப்பறுத் தாளவல்லான்
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்தநஞ்சைப்
பருக்கினவா றென்செய்கே னொற்றி யூருறை பண்டங்கனே.

                        -திருநாவுக்கரசர்  (4-86-11)


 பொருள்: ஒற்றியூரிலே உறைகின்ற பண்டரங்கக் கூத்தனான பெருமான் செருக்குக் கொண்ட இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலால் நெரித்தொடுக்கினது போலவே அடியேனுடைய பிறப்பையும் போக்கி அடியேனை அடிமையாகக் கொள்ளவல்லவன் . நெருங்கி நின்ற தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சினை அவனையே பருகுமாறு செய்த வினை இருந்தவாறென் ? ஆ ! என் செய்கேன் நான் !

13 September 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நலமார் மறையோர்வாழ் நல்ல நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.

                 -திருஞானசம்பந்தர்  (1-85-11)


பொருள்: நலம்  நிறைந்த மறைகளை ஓதும் அந்த ணர்கள் வாழும் நல்லம் நகரில் எழுந்தருளிய, கொல்லும் தொழில் வல்ல மழுவைக் கையில் ஏந்திய சிவபிரானை, கொச்சை வயம் என்னும் புகழுடைய தலத்தில் வாழ்ந்த தமிழ் ஞானசம்பந்தன், போற்றிப் பாடிய கலைநலம் வாய்ந்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர், கவலைகள் நீங்கப் பெறுவர்.

12 September 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாமார்க்குங் குடியல்லோம்
என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன்
குளிர்மதிவாழ் சடையானைத்
தேமாலைச் செந்தமிழின்
செழுந்திருத்தாண் டகம்பாடி
ஆமாறு நீரழைக்கும்
அடைவிலமென் றருள்செய்தார்.

                -திருநாவுக்கரசர் புராணம் (93)


பொருள்: நாமார்க்குங் குடியல்லோம் எனத் தொடங்கி, நான்மறையின் தலைவரும், கங்கையுடன் குளிர்ந்த பிறைச் சந்திரனும் வாழும் சடையையுடையவருமான சிவபெருமானை இனிய செந் தமிழின் மாலையாய செழுமையான திருத்தாண்டகத் திருப் பதிகத் தைப் பாடி, `உம் அரசனின் ஏவல் வழி, நீவிர் அழைக்கும் நிலையில் நாம் இல்லை!` என்று உரைத்தார்.

11 September 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே. 

               -திருமந்திரம்  (10-3-7,9)


பொருள்: தாரணையை மேற்கூறிய பாவனையளவில் செய்யாது, தத்துவ ஞானத்தைப் பெற்று அதன் வழிச் செய்யின், அஃது இறைவனோடே ஒன்றி நிற்பதாகும்.

10 September 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மன்னவன் தெம்முனை மேற்செல்லு
மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்
தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற்
றோர்தெய்வ முன்னலளே.

              -திருக்கோவையார்  (8-19,8) 


பொருள்: மன்னவனது பகைமுனை மேலேவப்பட்டுப் போமாயினும்; பெரிய வரியேற்றை யொப்பா னூருந்தேர் தன்னிலை யினல்லது புறத்துத் தங்காது; வரகுணனாகிய தென்னவனாலேத்தப்படுஞ் சிற்றம்பலத்தின் கண்ணான்; தானல்லாத வரியயன்முதலாகிய தேவர்க்கெல்லாம் முன்னே யுள்ளான்; அவளது மூவலை யொப்பாளும் வேறொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதாள்

06 September 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


செந்நெ லங்கலங் கழனித்
திகழ்திரு வாஞ்சியத் துறையு
மின்ன லங்கலஞ் சடையெம்
மிறைவன தறைகழல் பரவும்
பொன்ன லங்கல்நன் மாடப்
பொழிலணி நாவல்ஆ ரூரன்
பன்ன லங்கனன் மாலை
பாடுமின் பத்தரு ளீரே

              - சுந்தரர் (7-76-10)


பொருள்: செந்நெற்களையுடைய கழனிகளையுடைய புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத் தில் எழுந்தருளியிருக்கும் , இனிய மாலைகளை யணிந்த சடையை யுடைய எம் இறைவனது , ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைத் துதித்த , பொன்னரி மாலைகள் தூக்கப்பட்ட நல்ல மாடங்களையுடைய , சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரனது , பல அழகுகளையுடைய , கற்கத்தகுந்த நல்ல பாமாலையை , அடியராய் உள்ளவர்களே , பாடுமின்கள் .

05 September 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பரவை வருதிரை நீர்க்கங்கை பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவ மணிதரு கொன்றை யிளந்திங்கள் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்க மணிந்து குலாயசென்னி
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.

                     -திருநாவுக்கரசர்  (4-86-3)


பொருள்: கங்கை நீர் பாய்ந்து சிதறும்படிக்கான வன்மையதாயப் பலவாக உள்ள சடைத் தொகுதி மீது பாம்போடு பிறையையும் கொன்றை குரவம் கோங்கம் ஆகியவற்றின் நறுமலர்களையும் அணிந்து விளங்கும் திருமுடியினனாய்க் கடல் அலைகள் கடல்படு பொருள்களை மோதிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கின்ற திருஒற்றியூரில் வீற்றிருக்கும் உத்தமனே !

04 September 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத்
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் னிறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் னமையாள்வா னல்ல நகரானே.

                -திருஞானசம்பந்தர்  (1-85-2)


பொருள்: தன்னை இகழ்ந்து தக்கன் செய்த பெரிய வேள்விக்குச் சென்ற அமரர்களை, அவ்வேள்விக் களத்திலேயே பலவகையான துக்கங்களை அடையச் செய்தவனும், ஒளிவிடும் பொன்போன்ற சடைகள் தாழ்ந்து தொங்கக் கொக்கின் இறகோடு குளிர்ந்த வெண்மையான பிறையைச் சூடியிருப்பவனும் திகம்பரனுமாய இறைவன் நம்மை ஆளுதற்பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

03 September 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


தலைநெறியா கியசமயந்
தன்னையழித் துன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பில்
நெறியழித்த பொறியிலியை
அலைபுரிவாய் எனப்பரவி
வாயால்அஞ் சாதுரைத்தார்
கொலைபுரியா நிலைகொண்டு
பொய்யொழுகும் அமண்குண்டர்.

              -திருநாவுக்கரசர் புராணம்  (89)


பொருள்: கொல்லாமையை மேற்கொண்டவர்கள் எனக் கூறிக்கொண்டு ஒழுகும் பாவியர்களாய அச்சமணர்கள், `மேலாய நெறியாய சமண சமயத்தை அழித்து, அதனால், உன் ஆணையில் நின்ற பழைய ஒழுக்க நெறியையும் அழித்த அறிவற்ற அவரை வருத்துவாயாக' என்று வேண்டித் தம் வாயால் ஒரு சிறிதும் அஞ்சாது உரைத்தனர்.

29 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை 


மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே. 

                   -திருமூலர்  (10-3-7,2) 


பொருள்: மேருமலையின் உச்சியினின்றும் வானீர் அருவி எப்பொழுதும் வீழ்ந்துகொண்டிருக்கும். வில் வடிவாய் அமைந்த அம்பலத்தில் ஒளிவடிவாகிய சிவன், எல்லையில் இன்பத்தைத் தரும் ஆனந்தத் திருக்கூத்தினை எப்பொழுதும் ஆடிக் கொண்டே இருப்பான். இவ்விரண்டையும் நான் நீண்ட சுழுமுனை நாடி வழியாகச் சென்று கண்டேன்.

28 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வருட்டின் திகைக்கும் வசிக்கின்
துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே.

            -திருக்கோவையார்  (8-18,5)


பொருள்: வசிக்கின் துளங்கும் இன்சொல்லின் வசித்து ஒன்று சொல்லலுறுவேனாயின் அக்குறிப் பறிந்து உண்ணடுங்காநிற்கும்;  செப்பும் வகை இல்லை இவ்வாறொழிய அறிவிக்கும் வகை வேறில்லை; அதனான், புரி குழலாட்கு எங்ஙன் சொல்லி ஏகுவன் சுருண்ட குழலை யுடையாட்குப் பிரிவை எவ் வண்ணஞ் சொல்லிப் போவேன்! ஒருவாற்றானுமரிது எ - று.

27 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தொறுவில் ஆன்இள ஏறு
துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச்
செங்கயல் பங்கயத் தொதுங்கக்
கறுவி லாமனத் தார்கள்
காண்தகு வாஞ்சியத் தடிகள்
மறுவி லாதவெண் ணீறு
பூசுதல் மன்னும்ஒன் றுடைத்தே

               - சுந்தரர் (7-76-2)


பொருள்:  இளைய ஆனேறு , கேட்டவர் மனம் துண்ணென்று வெருவுமாறு ஒலிக்கின்ற குரலுக்கு அஞ்சி , வயல்களில் உள்ள வாளைமீன்கள் ஓடவும் , செவ்வரிகளையுடைய கயல்மீன்கள் தாமரைப் பூக்களில் ஒளியவும் , பகையில்லாத மனத்தை உடைய சான்றோர் அவற்றைக்கண்டு இரங்குதல் பொருந்திய திரு வாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் , குற்றமற்ற வெள்ளிய நீற்றைப் பூசுதல் , சிறந்ததொரு கருத்தை உடையது .

24 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இலங்கைக் கிறைவ னிருபது தோளு முடிநெரியக்
கலங்க விரலினா லூன்றி யவனைக் கருத்தழித்த
துலங்கன் மழுவினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
இலங்கு மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

                     -திருஞானசம்பந்தர்  (4-85-10)


பொருள்: இராவணனுடைய இருபது தோள்களும் தலைகளும் நெரியுமாறும் அவன் மனம் கலங்குமாறும் கால்விரலை ஊன்றி அவன் மனமதர்ப்பை அழித்த , ஒளி வீசும் மழுவை ஏந்திய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமேல் விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும் .

23 August 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற வடியார்க் கருள்செய்வான்
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடனாகைக் காரோ ணத்தானே.

              -திருஞானசம்பந்தர்  (1-84-10)


 பொருள்: நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும், பொல்லாதவர்களாகிய சமணர்கள் புறங்கூறவும், நல்லவரல்லாத புத்தர்கள் பழிதூற்றவும், தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப் பலரும் பணிந்து ஏத்த, கல் என்னும் ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

22 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மேவுற்றஇவ் வேலையில் நீடியசீர்
வீரட்டம் அமர்ந்த பிரானருளால்
பாவுற்றலர் செந்தமி ழின்சொல்வளப்
பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கர சென்றுல கேழினும்நின்
நன்னாமம் நயப்புற மன்னுகஎன்
றியாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா
னிடையேயொரு வாய்மை எழுந்ததுவே.

                - திருநாவுக்கரசர் புராணம் (74)


பொருள்: திருவீரட்டானத்து அமர்ந்திருக்கும் இறைவரின் திருவருளால், பாடற்கு இயைந்து அலர்ந்த செந்தமிழின் இனிய சொல்வளம் கொண்ட திருப்பதிக மாலையைப் பாடியருளிய முறையினால், `திருநாவுக்கரசு` என்று உனது பெயர் பலரும் விரும்புமாறு ஏழு உலகங்களிலும் நிலைபெறுவதாகுக! என எல்லார்க்கும் வியப்பு உண்டாகுமாறு வானில் ஓர் ஒலி எழுந்தது.

20 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரனு மாமே. 

                -திருமூலர்  (10-3-6,10)


பொருள்: பிரத்தியாகாரத்தை மனப்பயிற்சி அளவில் செய்தால், கால வரையறை இடவரையறைகள் இன்றி, எல்லா வற்றையும் ஒருங்கே உணரத்தக்க யோகக் காட்சியைப் பெற முடியும். அதனை அஞ்ஞான இருள் நீங்கி இறைவனை உணரும் கருத்தோடு செய்யின், தான் இறைவனை உணர்தலேயன்றிப் பிறரையும் உணரச் செய்கின்ற கடவுள் தன்மையையும் உடையவனாகலாம்.

17 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


வாரிக் களிற்றின் மருப்புகு
முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
நீர்மையென் னெய்துவதே.

            -திருக்கோவையார்  (8-17,16) 


பொருள்:  களிற்றின் மருப்புக்களினின்று முக்க முத்துக்களை; வேரிக்கு விலையாக முகந்துகொடுக்குஞ் சிறந்த மலைக்கணுண்டாகிய நாட்டையுடையாய்; விரியுந் திரையையுடைய யாறாகிய பெண்ணிற்குக் கொடுத்தற்குப் பொருந்திய;  பெரிய சடைமுடியையுடைய நம்பரது தில்லை யினுளளாகிய ஏரை யுடைய இக்களிக் கரு மஞ்ஞையை யொப்பாள்; இத்தன்மையை யெய்துவதென்? நீயுரை

16 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தந்தை தாய்உல குக்கோர்
தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்
பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

          - சுந்தரர் (7-75-4)

 

பொருள்: உலகம் எல்லாவற்றிற்கும் தந்தையாய் , ஒப்பற்ற மெய்ப்பொருளாய் உள்ளவனும் , உண்மையான தவத்தைச் செய் வோர்க்கு உறவான பெருமானும் , அன்புடையவர்க்குச் சிறந்த தலைவனும் ஆகிய , அழகிய , குளிர்ந்த பூக்களையுடைய , நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , ` இவனே எம் தந்தை ` என்று அறிந்து , நாள்தோறும் அடிபணிகின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்

14 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு மிடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

                 -திருநாவுக்கரசர்  (4-85-1)


பொருள்: காலையிலே எழுந்து நறுமணம் கமழும் தூய மலர்களைக் கொண்டு வந்து வானத்திலுள்ள தேவர்கள் விரும்பும் திருத்தலம் , நறுமண மலர்களால் வாசனை எங்கும் வீசும் சோலைகளை உடைய திருச்சோற்றுத்துறையாம் . அச்சிவ பெருமானுடைய சடையில் வீற்றிருக்கும் பிறைச் சந்திரன்அல்லவோ எம்பெருமானுக்கு அழகிய அணிகலனாய் வாய்த்திருக்கின்றது .

13 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாட னாரூ ருறையம்மான்
மண்ணார் முழவோவா மாடந் நெடுவீதிக்
கண்ணார் கடனாகைக் காரோ ணத்தானே.

                   -திருநாவுக்கரசர்  (1-84-2)


பொருள்: பெண்ணும் ஆணுமாய் ஓருருவில் விளங்கும் பெருமானும், பிறை சூடிய சென்னியனாய் அண்ணாமலை ஆரூர் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய தலைவனும் ஆகிய சிவபிரான் மார்ச்சனை பொருந்திய முழவின் ஒலி இடைவிடாமல் கேட்கும், மாட வீடுகளுடன் கூடிய நெடிய வீதிகளை உடைய அகன்ற இடப்பரப்புடைய கடலையடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

10 August 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


நீற்றால்நிறை வாகிய மேனியுடன்
நிறையன்புறு சிந்தையில் நேசமிக
மாற்றார்புரம் மாற்றிய வேதியரை
மருளும்பிணி மாயை அறுத்திடுவான்
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
எனநீடிய கோதில் திருப்பதிகம்
போற்றாலுல கேழின் வருந்துயரும்
போமாறெதிர் நின்று புகன்றனரால்.

                -திருநாவுக்கரசர் புராணம்  (70)


பொருள்: திருநீற்றினால் நிறைந்த மேனியுடன், மிகுந்த அன்பு பொருந்திய மனத்தில் விருப்பம் மிகப், பகைவரின் முப்புரங் களை எரித்த வேதியரான வீரட்டானத்து இறைவரை, மயக்கத்தையும் சூலையையும், மாயையும் அறுக்கும் பொருட்டுக் `கூற்றாயினவாறு விலக்ககலீர்` எனத் தொடங்கும் பெருமையுடைய குற்றம் இல்லாத திருப்பதிகத்தைப் போற்றுவதால், உலகத்தில் ஏழு பிறப்புக்களிலும் வரும் துன்பமும் நீங்குமாறு திருமுன்பு நின்று பாடினார்

09 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாவிக்குக் கீழே பன்னிரண் டங்குலந்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிகிலர்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே. 

            -திருமூலர்  (10-3-6,2)


பொருள்: உந்திக்குக் கீழ்ப்பன்னிரு விரற்கிடையளவில் உள்ள இடத்தில் மனத்தை நிலைபெறச் செய்வதாகிய இரகசிய முறையை உலகர் அறியார். அதனை அறிந்து மனத்தை அங்கே நிறுத்துவராயின், இறைவன் தானே வந்து அவர்களைத் தன்பால் வர அழைத்து, அங்கு வீற்றிருப்பான்.

07 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


பரம்பயன் தன்னடி யேனுக்குப்
பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந்
தோன்றுமிக் குன்றிடத்தே.

             -திருக்கோவையார்  (8-17,2) 


பொருள்: இக்குன்றிடத்துத் தோன்றுமிடம்; தில்லையின் வானவனது வானகத்தைச் சேர்ந்த தெய்வமகளிர் தமதிடமோ; யானையினென்பை வேலியாக நட்ட குரம்பைகளையுடைய குறத்தியர் இடமோ? நீ கூறுவாயாக

06 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மறைக ளாயின நான்கும்
மற்றுள பொருள்களும் எல்லாத்
துறையும் தோத்திரத் திறையும்
தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

                 -சுந்தரர்  (7-75-1)


பொருள்: வேதங்கள் நான்கும் மற்றைய பொருள்களும் , பல சமயங்களும் , அவற்றில் புகழ்ந்து சொல்லப்படும் கடவுள்களும் , இவை அனைத்திற்கும் முன்னேயுள்ள முதற்பொருளும் , வீடுபேறும் என்கின்ற இவை எல்லாமாய் நிற்கின்ற ஒலிக்கும் அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , ` இவனே முதல்வன் ` என்று அறிந்து , நாள்தோறும் அடிபணிகின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர் .

03 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை யட்ட கடவுண்முக்கண்
எம்மா னிவனென் றிருவரு மேத்த வெரிநிமிர்ந்த
அம்மா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

               -திருநாவுக்கரசர்  (4-84-10)


பொருள்: படம் எடுக்கும் மேம்பட்ட பாம்பினை ஒத்த அல்குலை உடையவளாய்ச் சிறிய பாதங்களை உடையளான பார்வதி அஞ்சக் கையிலே மேம்பட்ட கட்டமைந்த வில்லை ஏந்திய மன்மதனை அழித்த தெய்வமாகிய முக்கண்ணனாம் எம்பெருமான் என்று பிரமனும் திருமாலும் புகழும்படி தீத்தம்பமாக ஓங்கி வளர்ந்த தலைவனாகிய சிவபெருமானுடைய அடி நிழல் கீழதல்லவோ எனதாருயிர் .

02 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


வெரிநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வா ருயர்வா னடைவாரே.

                -திருஞானசம்பந்தர்  (1-83-11)


பொருள்:  வெள்ளம் உலகத்தை மூட, அவ்வெள்ளத்தே  மிதந்த வேணுபுரம் என்னும் சீகாழிப்பதியுள் தோன்றிய அழகியனவும் சிறந்தனவுமான வேதங்களில் வல்ல ஞானசம்பந்தனுடைய இத்திருப்பதிகப் பாடல்களை, விண்ணோர் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள அம்பர்மாகாளத்தை விரும்பித் தொழுது உருகி உரைசெய்பவர் உயர்ந்த வானோர் உலகத்தை அடைவார்கள்.

01 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சுலவிவயிற் றகம்கனலுஞ்
சூலைநோ யுடன்தொடரக்
குலவியெழும் பெருவிருப்புக்
கொண்டணையக் குலவரைபோன்
றிலகுமணி மதிற்சோதி
எதிர்கொள்திரு வதிகையினில்
திலகவதி யார்இருந்த
திருமடத்தைச் சென்றணைந்தார்.

                        -திருநாவுக்கரசர் புராணம்  (62)


பொருள்: சுழற்றிச் சுழற்றி வயிற்றுள் பற்றி எரியும் சூலை நோய் தம்முடனே தொடர, பொருந்தி எழும் விருப்பம் தம்மைக் கொண்டு செலுத்த, பெரிய மலை போன்று விளங்கும் மதிலின் ஒளி எதிர் தோன்றத், திருவதிகையில் திலகவதியார் இருந்த திருமடத்தைச் சென்று அடைந்தார்.

31 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. 

                 -திருமூலர்  (10-3-5,1)


பொருள்: ஐவர் பணியாளர்க்குத் தலைவன் ஒருவன்; அவனே அவ்வூர்க்கும் தலைவன். அவன், தான் நலன் அடைதற் பொருட்டுத் தனதாகக் கொண்டு ஏறி உலாவுகின்ற குதிரை ஒன்று உண்டு. அது வல்லார்க்கு அடங்கிப் பணிசெய்யும்; மாட்டார்க்கு அடங்காது குதித்து அவரைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும்.

30 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


பிணையுங் கலையும்வன் பேய்த்தே
ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
டேகினெம் பைந்தொடிக்கே.
   
              -திருக்கோவையார்  (8-16,9) 


பொருள்:- பிணையுங் கலையும்  மிக்க நீர் வேட்கையால்; நிரம்பிய அத்தமும் பெரிய பேய்த்தேரினைச் சென்றணுகும் முரம்பா னிரம்பிய சுரமும்; ஐயனே; நின்னொடு சொல்லின் மெய்யாக எம்பைந்தொடிக்கு; ஒப்பு மெல்லையு மில்லாத இறையோனுறைகின்ற தில்லை வரைப்பிற் பூக்களையுடைய குளிர்ந்த மருதநிலமும் பொய்கையு மல்லவோ! நீயிவ்வாறு கூறுவதென்னை

27 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி யன்றிமற் றறியான்
அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார்
தவநெறி சென்றமர் உலகம்ஆள் பவரே

                 - சுந்தரர் (7-74-10)


பொருள்: மங்கை ஒருத்தியை ஒருபாகத்தில் விரும்பி வைத்தும் , இடபத்தை விரும்பி ஊர்ந்தும் நிற்கின்ற , பகைத்தலை யுடையவரது முப்புரங்களை நீறுபட அழித்த அகங்கையை உடைய வனது கழலணிந்த திருவடிகளை யன்றி வேறொன்றை அறியாத வனாகியும் , அவன் அடியார்க்கு அடியவனாகியும் அவனுக்கு அடிய வனாகிய நம்பியாரூரன் , கங்கை போலப் பொருந்திய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக் குடியிலும் வீற்றிருக்கின்ற தலைவருக்குச் சேர்ப்பித்த இப்பாடல்களை , தங்கள் கையால் தொழுது , தங்கள் நாவிற் கொள்பவர்கள் , தவநெறிக் கண் சென்று , பின்னர்ச் சிவலோகத்தை ஆள்பவராதல் திண்ணம் .

25 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி தகர்த்துகந்த
எரியா ரிலங்கிய சூலத்தி னானிமை யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப் பானென்றுந் தன்பிறப்பை
அரியா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

                        -திருநாவுக்கரசர்  (4-84-3)


பொருள்: தாங்குதற்கரிய சினம் கொண்டு தக்கன் செய்த வேள்வியினை அழித்து மகிழ்ந்தவனாய் , நெருப்பின் தன்மை பொருந்தி விளங்கிய சூலப்படையை உடையவனாய் , இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடைய பெரியவனாய் , மேம்பட்ட அடியார்களின் பிறவித்தொடர்பை அறுப்பவனாய் , தான் பிறவா யாக்கைப் பெரியோனாய் இருக்கும் சிவபெருமானுடைய அடி நிழல் கீழது எம் ஆருயிரே

24 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அடையார் புரமூன்று மனல்வாய் விழவெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.

                 -திருஞானசம்பந்தர்  (1-83-1)


பொருள்: பகைவராகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் அனலிடைப்பட்டு அழியுமாறு கணைஎய்தவனும், நீரைத் தேக்கும் மடைகளையுடைய புனல் வளம் நிறைந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய விடை எழுதிய கொடியை உடைய எம் தந்தையும், வெண்மையான பிறை மதியை அணிந்த சடையினனும் ஆகிய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை வினைகள் சாரா.

23 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மன்னுதபோ தனியார்க்குக்
கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை
ஒழிநீஉன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி
எமையடையத் தவம்முயன்றான்
அன்னவனை இனிச்சூலை
மடுத்தாள்வம் எனஅருளி.

             -திருநாவுக்கரசர் புராணம்  (48)


பொருள்:  அப்பெருமாட்டி யார்தம் கனவில், இளமையான ஆனேற்றை உடைய சிவபெருமான் எழுந்தருளி, நீ உன்னுடைய மனக் கவலையை ஒழிவாயாக, உன் தம்பி முன்னமே ஒரு முனிவனாக இருந்து எம்மை அடைவதற்குத் தவம் செய்தனன், இனி அவனுக்குச் சூலை நோய் தந்து ஆட் கொள் வோம் என அருளிச் செய்தார் 

20 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே. 

                    -திருமூலர்  (10-3-4,2)


பொருள்: பாதங்கள் துடைகளின்மேல் ஒன்றாகப் பொருந்துமாறு ஏற்றி, பின் நன்றாக வலித்து இழுத்து அவை துடைகளின் புறம் நிற்குமாறு செய்து, அப்பாதங்களின்மேலே இரு கைகளையும் மலர வைப்பின், அந்நிலை தாமரை மலர் வடிவிற்றாய், ``பதுமாதனம்`` என்று சொல்லுதலைப் பெறும்.



19 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஒராக மிரண்டெழி லாயொளிர்
வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
யேயெம ரெண்ணுவதே.

               -திருக்கோவையார்  (8-16,1) 


பொருள்: ஒருமேனி பெண்ணழகு மாணழகுமாகிய விரண்டழகாய் விளங்குமவனது தில்லைக் கணுளளாகிய வொண்ணு தலுடைய; பூசப் படுவன பயின்று; அமிர்தத்தைப் பொதிந்து;  நெய்த்த சுணங்காகிய செம்பொன்னின் பொடியைச் சிதறின முலைகள்; இப்படியே பெருத்த கதிர்ப்பைக்கண்டால்; வள்ளலே; எமர் எண்ணுவது இல்லையே இவண் மாட்டெமர் நினைப்பதில்லையே?

18 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை

            -சுந்தரர்  (7-74-1)


பொருள்: மின்னலை உண்டாக்குகின்ற மேகங்கள் மழையைப் பொழிந்தபின் , அருவிகளாய் ஓசையுண்டாகப் பாய்ந்து அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதுவிக்கின்ற , அன்னப் பறவைகள் பொருந்திய காவிரியாற்றினது , அகன்ற கரையின்கண்  எழுந்தருளியிருப்பவரும் , திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் , வீற்றிருப்பவராகிய தலைவரும் , தமது அடியிணையைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவரும் , என் உடம்பை வருத்திய பிணியாகிய துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் மறக்குமாறு யாது !

10 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவில்
கடையார் கொடிநெடு மாடங்க ளோங்குங் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் பெரும்பதியே.

                -திருநாவுக்கரசர் (4-83-1)


பொருள்: மழு ஆயுதத்தைக் கையில் ஏந்திய சிவபெருமானுடைய திருத்தலம் யாது என்று வினாவினால் , நகர்ப்புற வாயிலில் கொடிகள் உயர்ந்து விளங்கும் நெடும் மாடங்களைக் கொண்டு விளங்கும் திருக்கழுமலமே அதுவாம் . அப்பதியானது நீர்மடைகளிற் பூம்பாளை விரியுந் தோறும் அவற்றிற் சொரியுந் தேனைப் பெண்வண்டுகள் முன்னதாக உண்ணவிட்டு அவற்றின் கடைவாயிற் சொட்டுந் தேனை ஆண் வண்கள் அருந்திக் கொண்டு பிரியாதிருக்கும் பெரும்பதியுமாம் .

09 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
ஏனத் தெயிற்றானை யெழிலார் பொழிற்காழி
ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே.

                -திருஞானசம்பந்தர்  (1-82-11)


பொருள்: விண்ணிலிருந்து  வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில், பன்றிப்பல் சூடியவனாய் எழுந்தருளி விளங்கும் சிவபிரானை, அழகிய பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியில் தோன்றிய ஞானத்தால் மேம்பட்ட அழகிய ஞானசம்பந்தன், உண்மையை உடையவனாய் ஓதிய இப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லவர் ஆவர்.

06 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பேராத பாசப்
பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத அன்புபெற
ஆதரித்த அம்மடவார்
நீராரும் கெடிலவட
நீள்கரையில் நீடுபெருஞ்
சீராரும் திருவதிகை
வீரட்டா னஞ்சேர்ந்தார்.

            -திருநாவுக்கரசர் புராணம்  (42)


பொருள்: பாசக் கட்டு நீங்குமாறு, சிவபெரு மானிடத்தே மீதூர்ந்த அன்பு கொண்ட திலகவாதியம்மையார் , புண்ணியத் தன்மை வாய்ந்த, திருக்கெடிலம் ஆற்றின் நீண்ட வடகரையில் அமைந்திருக்கும் நீடும் பெருஞ்சிறப்பு மிக்க திருவதிகை வீரட் டானத்தை அடைந்தார்.

05 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி,
மகம்சிவ பூசைஒண் மதிசொல் ஈரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

             - திருமூலர் (10-3-3,2)


பொருள்: தவம், செபம், ஆத்திகம், இன்பம் , தானம், சிவன் விரதம், சித்தாந்தக் கேள்வி, மகம், சிவபூசை, நற்பண்பு பத்தினையும் நியமமாகக் கொண்டவன் நியம யோகியாவான்.


04 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
யான்இன் றிரக்கின்றதே.

             - திருக்கோவையார் (8-15,12) 


பொருள்: ஒளியார்ந்த மதியே;  தில்லைக்கணுளனாகிய தொல்லோனது அருளுடையா ரல்லாதாரைப்போலக் கண்ணோட்டமின்றிப் போனவர் போதலா லுண்டாகிய இன்னாமையை நீயேகண்டாய் யான் சொல்ல வேண்டுவதில்லை; வளைகணிறுத்த நிற்கின்றன வில்லை; நெஞ்சு நெகிழ்ந்துருகாநின்றது;  நெடுங்கண் கடுயிலாவாய்க் கண்ணீர்த்துளியாகிய கதிர் முத்தங்களை  அவர்க்குச் சொல்வாயாக; இது நின்னை யானின்றிரக் கின்றதிது என்றவாறு 

03 July 2018

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


ஆசை பலஅறுக் கில்லேன்
ஆரையும் அன்றி யுரைப்பேன்
பேசிற் சழக்கலாற் பேசேன்
பிழைப்புடை யேன்மனந் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன்
ஒலிகடல் நஞ்சமு துண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

              - சுந்தரர் (7-73-10)


பொருள்: எனக்கு உள்ள ஆசையை ஒன்றையும் நீக்கமாட்டேன் ; அவ்வவாவினால் யாவ ரிடத்தும் வெகுளிதோன்றுதலின் , எவரிடத்தும் பகைத்தே பேசுவேன் ; ஒன்று சொல்லின் , பொய்யல்லது சொல்லேன் ; எனினும் புகழை மிக விரும்புவேன் ; இவற்றால் மனத்தாலும் குற்றம் புரிதலுடையேன் . ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்ட பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

02 July 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு கின்றது சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந் துன்றிவெண் டிங்கள் சூடும்
கற்றைச் சடைமுடி யார்க்கிட மாய கழுமலமே.

                    -திருநாவுக்கரசர்  (4-82-7)


 பொருள்: எம் பெருமானுடைய திருமேனியைச் சுற்றிப் பாம்புகள் பின்னிக் கிடக்க , விரும்பத்தக்க கொன்றைமலர் பொருந்த , வெள்ளிய பிறையைச்சூடும் கற்றையான சடையை உடைய எம்பெருமானுக்கு உறைவிடமாகிய கழுமலத்திருத்தலம் எல்லா நலன்களும் நிரம்பப் பெற்றதாய் ஊழிப்பெருவெள்ளத்துள் கடலில் மிதந்து தேவர்கள் கூட்டமாக வந்து வணங்கித் தொழப்படும் சிறப்புடையது .

29 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பயிலும் மறையாளன் றலையிற் பலிகொண்டு
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே.

                -திருஞானசம்பந்தர்  (1-82-3)


பொருள்:  பிரமனின் தலையோட்டில் பலியேற்று அனைவரும் துயிலும் நள்ளிரவில் ஆடும் ஒளிவடிவினனாகிய சிவபிரான் உறையும் கோயில், மயில், மடப்பம் பொருந்தியமான், மதி, இள மூங்கில், வெயில் ஆகியனவற்றைப் போன்று கண்ணுக்கு இனிய மென்மையும், மருளும் விழி, முகம், தோள்கள், உடல்ஒளி இவற்றால் பொலியும் மகளிர் வாழும் திருவீழிமிழலையாகும்.

28 June 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


நில்லாத உலகியல்பு
கண்டுநிலை யாவாழ்க்கை
அல்லேன்என் றறத்துறந்து
சமயங்க ளானவற்றின்
நல்லாறு தெரிந்துணர
நம்பர்அரு ளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும்
அமண்சமயம் குறுகுவார்.

                  -திருநாவுக்கரசர் புராணம்  (37)


பொருள்: நிலையில்லாத இவ்வுலகியல்பைக் கண்டு, நிலையற்ற இந்த நிலவுலக வாழ்வில் நின்று உழலகில்லேன் என முற்றத் துறந்து, சமயங்களின் நல்ல நெறியைத் தெரிந்து உணர்வதற்கு நம்பரான சிவபெருமான் அருள் செய்யாமையால், கொல்லாமையை மேற்கொண்டு அதனுள் மறைந்து வாழும் சமண சமயத்தைச் சார்பவர் ஆகி.

25 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே. 

            -திருமூலர்  (10-3-2,1)


பொருள்: கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்புக்கள் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

21 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆரம் பரந்து திரைபொரு
நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
சிறந்தார்க்குஞ் செறிகடலே.

             -திருக்கோவையார்  (8-15,2)


பொருள்:  புலியூர்க்கணுளனாகிய தூயோனது புகழையுடைய அம்பரைச் சூழ்ந்து; எற்றி கரையைமோதி; மிக்கொலிக்கும் வரையிகவாத கடலே; முத்துப்பரந்து திரைக டம்முட்பொருங் கடனீர்; முகிலையு மீனையுந் தன்கட் பரப்பிச் சீர்த்த வாகாயமேபோல விளங்கி; ஒளிபுலப் படுத்துந் துறையையுடையவர்; சென்றவர்; மீண்டுவரும்பரிசு உனக்குக் கூறினரோ?

20 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அருத்தம் பெரிதும் உகப்பன்
அலவலை யேன்அலந் தார்கள்
ஒருத்தர்க் குதவியேன் அல்லேன்
உற்றவர்க் குந்துணை யல்லேன்
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன்
புற்றெடுத் திட்டிடங் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

               -சுந்தரர்  (7-73-6)


பொருள்: தொண்டீர் , யான் , பொருளையே பெரிதும் விரும்புவேன் ; அதன் பொருட்டு எங்கும் திரிதலையுடையேன் ; துன்புற்றவர் ஒருவர்க்கேனும் உதவியுடையேனல்லேன் ; உறவாயி னார்க்கும் துணைவனல்லேன் ; இன்ன பலவாற்றால் , பொருந்துவதாய பண்பு எனிலோ , ஒன்றேனும் இல்லாதேனாயினேன் . புற்றைப் படைத்து , அதனை இடமாகக் கொண்ட மெய்ப்பொருளாயுள்ளவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திரு வுள்ளத்தைக் கேட்டறிமின் .

19 June 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கடையார் கொடிநெடு மாடங்க ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ் சூடி யுகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன் வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க நாடொறு மாடுவரே.

                    -திருநாவுக்கரசர்  (4-82-2)


பொருள்: கொடிகள் கட்டப்பட்ட பெரிய மாடவீடுகள் வீதிகள் முழுதும் நெருக்கமாக அமைந்து விளங்க , எல்லா ஆன்மாக்களையும் தனக்கு அடிமையாக உடைய சிவபெருமான் தலைமாலையைச் சூடிக்கொண்டு மகிழ்ந்து காளை வாகனனாய்க் காட்சி வழங்கும் திருக்கழுமலத்தை அடையும் அடியவர்கள் தங்கள் நல்வினை தீவினைகள் யாவும் அஞ்சி அகலப் பிறவிப்பிணி தீர்ந்தோம் என்று நாடோறும் மகிழ்ந்து கூத்தாடுவர் .

18 June 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.

                    -திருஞானசம்பந்தர்  (1-81-11)


பொருள்: அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும். ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும், இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

14 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எந்தையும்எம் அனையும்அவர்க்
கெனைக்கொடுக்க இசைந்தார்கள்
அந்தமுறை யால்அவர்க்கே
உரியதுநான் ஆதலினால்
இந்தவுயிர் அவருயிரோ
டிசைவிப்பன் எனத்துணிய
வந்தவர்தம் அடியிணைமேல்
மருணீக்கி யார்விழுந்தார்.

           -திருநாவுக்கரசர் புராணம்  (32)


பொருள்: என்னுடைய தந்தையாரும் தாயாரும் என்னை அவர்க்குத் தர இசைந்தனர். அம் முறையால் நான் அவர்க்காக உரியது ஆதலால், இந்த என் உயிரை அவருடைய உயிருடன் சேரச் செய்வேன் என்று துணிவுகொள்ள, அவருடைய திருவடிகளில் மருணீக்கியார் விழுந்தனராகி.

13 June 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 

          - திருமூலர் (10-3-1,4)


பொருள்: அட்டாங்கம் (யோகத்தின் எட்டுறுப்புக்கள்) யாதெனில்  இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன.

11 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஏனற் பசுங்கதி ரென்றூழ்க்
கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை
செய்யும்வம் பார்சிலம்பா
யானிற்றை யாமத்து நின்னருள்
மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை
யுறார்செல்லுஞ் செல்லல்களே.

                     -திருக்கோவையார்  (8-14,12) 


பொருள்:  பசியகதிர் கோடையாலழிய; எழிலி உன்னி அஃதழியாமன் மழைபெறக் கருதி; கானத்துவாழுங் குறவர்கள் தெய்வத்திற்குப் பலி கொடுத்தாரவாரிக்கும் வம்பார்ந்த சிலம்பை யுடையாய்; இற்றையிரவின்கண் யான் நின்னேவன்மேனிற்கவேண்டி; தேனோடுமலர்ந்த கொன்றையையுடையானது தில்லையைப் பொருந்தாதாரடையுந் துன்பத்தையடைந்தேன்; நீ கருதியதூஉ முடிந்தது

08 June 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன்
தொடர்ந்தவர்க் குந்துணை யல்லேன்
கல்லில் வலிய மனத்தேன்
கற்ற பெரும்புல வாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான்
அருமறை ஆறங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

                  -சுந்தரர்  (7-73-3)


பொருள்: யான் யாதேனும் ஒன்று சொல்வதா யின் , எனது பெருமையை யன்றி வேறொன்றைச் சொல்லேன் . அயலவர்க்கேயன்றி , உறவினர்க்கும் உதவுவேனல்லேன் ; அத் துணைக் கல்லினும் வலிய மனத்தை யுடையேன் . கல்வியை நிரம்பக் கற்ற பெரிய புலமை வாழ்க்கை உடையவர்களது துன்பத்தைப் பெரிதும் நீக்குகின்றவனும் ,  வேதங்களும்,  ஆறு அங்கங்களும் சொல்லும் முடிந்த பொருளானவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ என்று கேளீர் 

07 June 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


சாட வெடுத்தது தக்கன்றன் வேள்வியிற் சந்திரனை
வீட வெடுத்தது காலனை நாரணன் நான்முகனுந்
தேட வெடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
ஆட வெடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே.

                  -திருநாவுக்கரசர்  (4-81-10)


பொருள்: தக்கன் நிகழ்த்திய வேள்வியில் தனக்கு உரிய அவியைப் பெறுவதற்காக வந்து கலந்து கொண்ட சந்திரனைத் தேய்ப்பதற்காகத் தூக்கப்பட்டதும் , கூற்றுவனை அழிப்பதற்கு உயர்த்தப்பட்டதும் , திருமாலும் பிரமனும் காணமுடியாது தேடுமாறு பாதலத்துக்குக் கீழும் வளர்ந்ததும் தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடுவதற்காக உயர்த்தப்பட்டதும் ஆகிய சிவபெருமானுடைய இடது திருவடியன்றோ நம்மை அடிமையாகக் கொண்டதாகும் .