தினம் ஒரு திருமுறை
- திருமாளிகைத்தேவர் (9-3-10)
திருநீ றிடாஉருத் தீண்டேன் என்னும்
திருநீறு மெய்திரு முண்டந் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டிவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்
வருநீ ரருவி மகேந்திரப்பொன்
மலையில் மலைமக ளுக்கருளும்
குருநீ என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
திருநீறு மெய்திரு முண்டந் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டிவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்
வருநீ ரருவி மகேந்திரப்பொன்
மலையில் மலைமக ளுக்கருளும்
குருநீ என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
- திருமாளிகைத்தேவர் (9-3-10)
பொருள்: திருநீற்றை நீரில் குழைத்து நெற்றியில் அணிந்து, திருநீறு அணியாத உருவத்தைத் தீண்டேன் என்று சொல்லிப் நீலகண்டனாகிய சிவபெருமானுடைய பண்பு செயல் இவை பற்றிய செய்திகளை சொல்லிக் கொண்டு தெருவிலே திரிகிறாள். பருவமழையால் பெருகு கின்ற நீர் இழியும் அருவிகளை உடைய மகேந்திரமாகிய மலையில் ஆகமப்பொருளை உமாதேவியாருக்கு உபதேசிக்கும் குருவே! குணக்குன்றே! என்று குலாத்தில்லை அம்பலக் கூத்தனுடைய நினைப்பிலே, சிவபெருமானுடைய உருவெளித் தோற்றத்தைக் கண்டு அழைக்கிறாள்.
No comments:
Post a Comment