தினம் ஒரு திருமுறை
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
- திருமூலர் (10-1-2)
பொருள்: சிவபெருமானைத் தவிர அமரர் பிறர் இல்லை, அவனை உணராது செய்யும் தவம் பயன்தருவதில்லை, அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடத்தமுடியாது,. அவனது அருளின்றி முத்திக்கு பெறுவதற்கு வழி இல்லை.
No comments:
Post a Comment