சைவ தோத்திரங்கள்

சைவ தோத்திரங்கள்

 1.   சைவ சமயத்தின் நோக்கம் என்ன?
  அனைத்து உயிர்களையும் மாசு நீக்கிப் பக்குவபடுத்திச் சிவமாம் தன்மைபெறச் செய்வதே சைவ சமயத்தின் நோக்கம் ஆகும் .
2.   சைவத்தின் இருண்டகாலம் எது ?
  களப்பிரர்ஆட்சிகாலத்தில் காலம் கி.பி 300 முதல் கி.பி 600 வரை .
3.   சைவ சமயத்தின் பொற்காலம் எது ?
  பல்லவர்களும், சோழர்களும் ,காலம் கி.பி 600 முதல் கி.பி 1200 வரையில் .
4. திருமுறை என்னும் சொல்லிற்கு பொருள் என்ன ?
   திரு+முறை திரு-திரு என்றச் சொல் சிவத்தைக் குறிக்கும், முறை-நூல்முறை, மறைமுறை,சிவமேயாயமுறை , அடைந்தாரை , உணர்ந்தாரை சிவமே ஆக்குகின்றமுறை , சிவன் மகிழ்ந்தருள்முறை .
5.திருமுறைகள் நமக்கு எவ்விதம் கிடைத்தது?
  இராச ராசசோழன் மூவர் அருளிய திருப்பதிகங்களைத் தொகுக்க விரும்பி , தன் விருப்பத்தை நம்பியாண்டார் நம்பிகளிடம் தெரிவித்தான். அவர் திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாரின் அருளால் மூவர் முதலிகளின் திருப்பதிகங்கள் தில்லை நடராசர் பெருமான் கோயிலில் இருப்பதை அறிந்து அவற்றை கண்டு எடுத்தனர் , சிலசுவடிகள் செல்லரித்து போயிருந்தன , கிடைத்தவற்றைக் கொண்டு நம்பியாண்டார் நம்பிகள் திருமுறைகளை வகுத்தார் .
6. திருமுறைகள் எத்தனை?
   திருமுறைகள்  பன்னிரன்டு .
7. திருமுறைகளில் உள்ள நூல்கள் யாவை ? அருளியவர் யாவர் ?
                         (தேவாரம்)                       
மூதல் மூன்று திருமுறைகள் -  அருளியவர் திருஞானசம்பந்தர் .
நான்கு , ஐந்து , ஆறாம்   திருமுறைகள்அருளியவர் திருநாவுக்கரசர் .
ஏழாம் திருமுறை அருளியவர் சுந்தரமூர்த்திசுவாமிகள்
எட்டாம்  திருமுறை (திருவாசகம் , திருகோவையார்) – அருளியவர் மாணிக்கவாசகர்
ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா ,திருப்பல்லாண்டு) – அருளியவர் திருமாளிகைதேவர் , சேந்தனார் , கருவூர்தேவர் ,பூந்துருத்திநம்பிகாடநம்பி ,கண்டராதித்தா , வேணாட்டடிகள் , திருவாலியமுதனார் , புருடோத்தமநம்பி , சேதிராயர்.
பத்தாம் திருமுறை ( திருமந்திரம்) – அருளியவர் திருமூலர்
பதினோராம் திருமுறை  - அருளியவர் திருவாலவாயுடையார் , காரைக்கால்அம்மையார் , ஐயடிகள்காடவர்கோன் , சேரமான்பெருமாள்நாயனார் , நக்கீரர்தேவர் , கல்லாடதேவர் , கபிலதேவர் , பரணதேவர் , இளம்பெருமான் அடிகள் , அதிராவடிகள் , பட்டிடத்தடிகள் , நம்பியாண்டார்நம்பி .
பன்னிரண்டாம் திருமுறை ( பெரியபுராணம் ) – அருளியவர் சேக்கிழார் .
8.  திருகடைக்காப்பு என்று கூறப்படுவது எது ?
     திருஞானசம்பந்தரின் பதிகங்களை திருகடைக்காப்பு  என கூறுவர் .
9. திருநாவுக்கரசரின் பதிகங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?
   தேவாரம் என அழைக்கப்பட்டன .
10 .சுந்தரமூர்த்திகளின் பதிகங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?
    திருப்பாட்டு என அழைக்கப்பட்டது .
11.திருமுறைகள் வகுக்கப்பட்டகாலங்கள் எவை?
    முதல் ஏழ திருமுறைகள் இராசராச சோழன் காலத்தில் கி.பி . 1010 லிருந்து கி.பி.1014க்குள் . எட்டு ,ஒன்பது , பத்து , பதிணோராம் திருமுறைகள் இராசேந்திரசோழன் காலத்தில் கி.பி.1035லிருந்து கி.பி.1043க்குள் நம்பியாண்டார் நம்பிகளால் வகுக்கப்பட்டது. பன்னிரண்டாம் திருமுறை இரண்டாம்  குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 1146இல் தொகுக்கப்பட்டது .
12.தேவாரம் எவ்வாறு தொகுக்கப்பட்டது ?
  உலகியலில் பொதுவாக ஒருவரது உடலுக்குள்ள வயதைக் கொண்டே அவர் மூத்தவரா அல்லது இளையவரா என்று கணக்கிடுகின்றோம். இளமையில் இறைவன்திருவருளில் கலந்து வீடுபேறு பெற்ற கால அடைவினைக் கருத்தில் கொண்டே உயிருக்குள்ள இளமையும் , மூதுமையும்
கணிக்கப்படுகிறது . இந்த வகையில் நோக்கும் போது நாவுக்கரசரை விட சம்பந்தர் உயிர்வயதில் மூத்தவராகிறார் . எனவே அவர் பாடிய பதிகங்களே முதலில் இடம் பெற்றன .
13. திருஞானசம்பந்தர் எங்கு அவதாரம் செய்தார் ? அவருடைய பெற்றோர்    யாவர் ?
    சீர்காழியில்  சிவபாத இருதயர் பகவதியம்மையார் என்னும் பெற்றோர்ருக்கு ஞானசம்பந்தர் அவதாரம் செய்தார் .
14. ஞானசம்பந்தர் அவதாரம் செய்த காலம் ?
     கி.பி. ஏழாம்நூற்றாண்டு
15.  ஞானசம்பந்தர் எப்போது எங்கு ஞானபால் உண்டார் ?
      அவர் தம் மூன்றாம் வயதில் சீர்காழிபிரம்ம தீர்த்தக்கரையில் இறைவனால் ஞானப்பால் இளிக்கப்பெற்றார் .
16. ஞானசம்பந்தர் எங்கு பொற்றாளம் பெற்றார் ?
திருக்கோலக்கா என்னும் தலத்தில்.
17. ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்து சிவிகையும் , குடையும் அருளியது எங்கு ?
    திருவத்துறை என்னும் தலத்திற்கு சற்றுத் தொலைவில் உள்ள மாறன்பாடி என்னும் தலத்தில்  ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்து சிவிகையும் , குடையும் , முத்து சின்னங்களூம் தந்து அருள செய்தார் .
18. ஞானசம்பந்தர் பொற்கிழி பெற்ற ஊர் எது ?      
     திருவாவடுதுறையிரல் இறைவனிடம் வேண்டி பொற்கிழி பெற்றார் .
19. ஞானசம்பந்தர்  படிக்காசு பெற்ற இடம் எது ?
     திருவீழிமிழலையில்  படிக்காசு  பெற்று  அடியார்கள் பசிதீர்த்தார் .
20. பாண்டிய நாட்டில் சைவநெறி தழைக்க ஞானசம்பந்தர்  யாது செய்தார் ?
     பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனின் வெப்பு நோயை திருநீற்று பதிகம்பாடி தீர்த்தார் . சமணர்களுடன் அனல்வாதம் , புனல்வாதம் செய்து வென்று பாண்டிய நாட்டில் சைவநெறி தழைக்க செய்தார் .
21.கோளறு பதிகம் யாரல் எப்போது அருளிச் செய்யப்பட்டது ?
    பாண்டிய நாட்டிற்குச் செல்ல ஞானசம்பந்தர் புறப்பட்டபோது உடனிருந்த அப்பர் நாளும் , கோளும் தீய எனக்கூறித்தடுக்க , அவை இறையடி யார்க்கு நல்லணவே எனச்சொல்லி இப்பதிகத்தை ஞானசம்பந்தர் பாடினார்.
22.ஞானசம்பந்தர் திருமணம் செய்து கொண்டதலம் எது ?
   நல்லூர்ப் பெருமணம் என்றும் தல்த்தில் நம்பாண்டார் நம்பி என்பவரின்மகளை திருமணம் செய்துக் கொண்டார் .
23.திருஞானசம்பந்தர் எந்நாளில் எத்தலத்தில் முத்திப்பேறு பெற்றார் ?
   வைகாசி மாதம் மூலம் நட்சத்திர நாளில் நல்லூர் பெருமணம் என்னும் தலத்தில் திருமணம் கொண்டு , அக்கோலத்துடனே அனைவரும் சூழஇறையருட் சோதியில் கலந்தார் .
24.திருஞானசம்பந்தர் எந்த வயதில் முத்திப் பெற்றார்?
   தமது பதினாறாவது வயதில் முத்திப் பெற்றார் .
25.திருஞானசம்பந்தரின் பதிகங்களின் அமைப்பு என்ன?
   ஞானசம்பந்தரின் பதிகங்கள் பதினொன்று பாடல்களைக் கொண்டவையாகவே உள்ளன. முதல் ஏழ பாடல்கள் அத்திருப்பதிகத்திற்கு உரிய தலங்களின் இயற்கைவனப்பு , அங்கெழந்தருளியுள்ள இறைவனின் அருமைபெருமைகளைக் கூறுவதாகவும், எட்டாவது பாடல் இராவணன் கயிலையை எடுக்கமுயன்றது பற்றியும், ஓன்பாதவது பாடல் நான்முகனும் திருமலும் இறைவனைத் தேடி கானமுடியாமை பற்றியும் , பாத்தாம் பாட்டு சமண , பெளத்தர்கள் பற்றியும் இறுதி பாடல் அப்பதிகத்தைபயில்வாதால் அடையும் நற்பயன் பற்றியும் விளக்கும்முறையில் அமைந்துள்ளது .
26. ஞானசம்பந்தரின் பதிகங்களின் பா வகைகள் யாவை?
    திரு எழகூற்றிருக்கை , ஏகபாதம் , மொழிமாற்று , இயமகம் , திருவிருக்குறள் , சக்கரமாற்று , திருவிராகம் முதலான பா வகைகளில் உள்ளது .
27.முதலாந் திருமுறையில் எத்தனை பதிகங்கள் உள்ளன ?
   முதலாந்திருமுறையில் நூற்று முப்பத்தாறு பாதிகங்களும் , ஆயிரத்து நானூற்று அறுபத்தொன்பது பாடல்களும் உள்ளன .
 28. ஞானசம்பந்தரின் முதலாந்திருமுறையில் உள்ள அற்புதங்கள் எத்தனை ?
   1.ஞானப்பால் உண்டமை – ‘ தோடுடைய செவியன்
   2.பெற்றாளம் பெற்றமை  - ‘மடையில் வாளை
   3.முயலகன் நோய் நீங்கியது – ‘துணிவளர் திங்கள்
   4.அனல் வாதம் – ‘போகம் மார்த்த
   5.ஆண்பனை பெண்பனையாதல் – ‘பூர்தேந்தாயன
   6. வாசிதீரப்பாடிகாசு பெற்றது – ‘வாசிதீரவே
   7.வெஞ்சுரம் நீக்கியது – ‘அவ்வினைக்கிவ்வினை
29.முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள திருத்தலங்கள் எத்தனை ?
   நூற்று அறுபத்து நான்கு திருத்தலங்கள் ஆகும் .
30. இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகங்கள் எத்தனை ?
    நூற்று இருபத்திரண்டு பதிகங்களும், ஆயிரத்து முன்னூற்று முப்பத்தோன்று பாடல்களும் உள்ளன .
31.இரண்டாம் திருமுறையில் உள்ள அற்புதத்திருபதிகங்கள் எவை?       
   1.பாலைநெய்தலாகப பாடியது – ‘ காரைகள் கூகை
   2.முத்துச்சிவிகை பெறல்  - ‘எந்தை யீசன்                        
   3.அரவுதீண்டிய வணிகருக்காக – ‘சடையாய்
   4.மறைக் கதவம் அடைக்க – ‘ சதுரம் மறை 
   5.கோளறு பதிகம் – ‘ வேயுறு தோளி
   6.வெப்புநோய் தீர்தப் பதிகம் – ‘ மந்திரமாவது
   7.என்பு பெண்ணாக – ‘ மட்டிட்ட
32.முன்றாம் திருமுறையில் எத்தனை பதிகங்கள் உள்ளன ?
    நூற்று இருபத்திரண்டு பதிகங்களும், ஆயிரத்து முன்னூற்று நாற்பத்தேழ பாடல்களும் உள்ளன .
33.இந்த திருமுறையில் இடம் பெற்றுள்ள தலங்கள் எத்தனை ?
   ஐம்பத்தேழ தலங்கள் இடம் பெற்றுள்ளன .
35. முன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள அற்புதப் பதிகங்கள் எத்தனை?
     1.பொன் வேண்டும் பதிகம் – ‘இடரினும்
     2.ஓடம் விட்ட பதிகம் – ‘ கொட்டமே
     3.அஞ்செழத்தின் சிறப்பை உபநயத்தின் போது கூறிய பதிகம் –‘துஞ்சலும்                                       
     4.சமணர் இட்ட தீ பாண்டியர்க்கு சென்றடைய கூறிய பதிகம் – ‘‘செய்யனே
     5.அனல் வாதத்தில் தீயில் இட்ட பதிகம் – ‘தளரிளவளர்
     6.புனல் வாததில் ஆற்றில்  இட்ட பதிகம் – ‘வாழ்க அந்தணர்
36.திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருமுறைகள் எவை ?
     நான்கு ,ஐந்து , ஆறாம் திருமுறைகளாம் .
37.  திருநாவுக்கரசர் அவாதரம் செய்த தலத்தையும் அவர் பெற்றோரின் பெயர்களையும் கூறு ?
    திருநாவுக்கரசர்  திருவாமூரில் அவாதராம் செய்தார் , அவருடைய பெற்றோர் புகழனார் மாதினியார் ஆகும் .
38.திருநாவுக்கரசர் அவதாரம் செய்த காலம் எது ?
   கி,பி , ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் .
39.திலகவதியார் யார் ?
   திருநாவுக்கரசரின் தமக்கையார் .
40. திருநாவுக்கரசருக்குதருமசேனர்என்றபெயர் எப்போது பெற்றார் ?
திருநாவுக்கரசர் சமணசமயத்தை சார்ந்து அதில் சிறந்து விளங்கிய போதுதருமசேனர்என்ற பெயரைப் பெற்றார் .
41. சிவபெருமான் திருநாவுக்கரசரை எவ்விதம் ஆட்கொண்டார் ?
     சூலைமடுத்து ஆட்கொண்டார் .
42.சமணர்களால் திருநாவுக்கரசரருக்கு நேர்ந்த சோதனைகள் யாவை ?
    சுண்ணாம்பு நீற்றறையில் இடுதல் , யானையை ஏவி தலையை இடறுதல் , நஞ்சளித்தல் , கல்லினொடு கட்டி கடலில் இடுதல் முதலிய சோதனைகள் நேர்ந்தன .
43.திருநாவுகரசரால் திருந்திய பல்லவ மன்னன் யார் ?
    மகேந்திரவர்ம்பல்லவன் .
44.திருநாவுக்கரசர்  எங்கு இடபக்குறியும் சூலக்குறியும் பொறிக்கப் பெற்றார் ?
   பெண்ணாடகத்தில் இடபக்குறியும் சூலக்குறியும் பொறிக்கப் பெற்றார் .
45.திருநாவுகரசர் திருவீழிமிமழலையில் எவ்விதம் அடியார்களுக்கு அமுதளித்தார் ?
  இறைவனிடம் படிகாசு பெற்று அடியார்களுக்கு அமுதளித்தார் .
46.திருவடி தீட்சை திருநாவுகரசருக்கு எங்கு கிடைத்தது ?
  திருநல்லூரில்.
47.ஆப்பூதியடிகள் யார் ?
   திருநாவுக்ரசரிடம் அளவிலாப்பக்தி பூண்டு அவரையே குருவாக எண்ணி வழிபட்டு வந்தவர்.
48.திருமுறைக்காட்டில் திருநாவுக்கரசர் யாது செய்தார் ?
    திருமுறைக்காட்டில் மறைகதவம் திறப்பித்தார்.
49. திருநாவுக்கரசர் எத்தலத்தில் இறைவனால் கட்டமுது தரப்பெற்றார் ?
   திருப்பைஞ்ஞீலியில் இறைவனால் கட்டமுது தரப்பெற்றார் ?
50.கயிலைக்காட்சியைக்காணும் எண்ணம் திருநாவுக்கரசருக்கு எவ்வாறு எழந்தது ?
  தென்கயிலாயம் எனப்படும் காளத்தியை தரிசனம் செய்த அப்பருக்கு வடகயிலாத்தைக் கண்டு தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழந்தது.

51.திருவையாற்றில் திருநாவுக்கரசருக்கு கிடைத்த பெரும் பேறு யாது ?
      திருவையாற்றில் கயிலைக் காட்சியை காணும் பேறு பெற்றார்.
52. திருநாவுக்கரசர் திருமடத்தை எங்கு கட்டினார்?
    திருப்பூந்துருத்தியில் திங்களும் ஞாயிறும் தோயும் திருமடத்தைக் கட்டினார்.
53. திருநாவுக்கரசர் முத்தி பெற்றது எந்த நாளில்?
     சித்திரை மாதத்து  சதய நட்சத்திர நாளில்  திருநாவுக்கரசர் திருப்புகலூரில் முத்தி பெற்றார்.
54. திருநாவுக்கரசர் எந்த வயதில் முத்தி பெற்றார் ?
    எண்பத்துஒராம் வயதில் முத்தி பெற்றார்.
55. திருநாவுக்கரசரின் பதிக அமைப்பு முறையாது?
    திருநாவுக்கரசருடைய பதிகங்கள் பல சிவபெருமானை முன்னிலைப் படுத்திகறை இரந்து வேண்டும் நிலையில் அமையப்பெற்றுள்ளன.இவர் பதிகங்கள் பெரும்பாலூம் பத்து பாடல்களைக் கொண்டதாகும் ஈற்றுப்பாடல்கள் தோறும் கயிலைமலையினை எடுத்த இராவணனுக்கு இறைவன் அருளிய திறத்தை குறிப்பிட்டு பாடியுள்ளார் .
56 திருநாவுக்கரசரின் பதிகங்களின் யாப்பு முறைகள் யாவை?
     திருக்குறுந்தொகை,திருநேரிசை,திருவிருத்தம்,திருத்தாண்டகம் முதலியன.
57.தாண்டக வேந்தர் என்று யாருக்குப் பெயர்?
    திருநாவுக்கரசருக்கு  தாண்டக வேந்தர் என்று  பெயர்.
58.நான்காம திருமுறையில் எத்தனைப் பதிகங்கள் உள்ளன?
   நான்காம் திருமுறையில் நூற்று பதிமூன்று பதிகங்களும், ஆயிரத்து எழபது பாடல்களும் உள்ளன.
59.நான்காம் திருமுறையில் பாடப் பெற்றுள்ள திருத்தலங்கள் எத்தனை?
  ஐம்பது திருத்தலங்கள்.
60.நான்காம் திருமுறையிலுள்ள அற்புதத்திருபதிகங்கள் யாவை?
   1.சூலை நோய் நீக்கம் – ‘கூற்றாயினவாறு
   2.கொல்யானைதலை வணங்கியமை- ‘சுண்ண வெண்
   3.கயிலைக்காட்சி கண்டமை –‘ மாதர் பிறைக் கண்ணியானை
   4.கல்லையே தெப்பமாக்கியமை –‘ சொற்றுனை வேதியன்
   5.அப்பூதி மகனை உயிர்ப்பித்த பதிகம் –‘ ஒன்று கொலாமவர்
   6.ரிசப, சூல முத்திரை பொறிக்க வேண்டுதல்-‘ பொன்னார் திருவடிக்கு
   7. திருவடி சூட்ட வேண்டுதல் –‘கோவாய் முடுகி’.
61.ஐந்தாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகங்கள் எத்தனை?
    நூறு பதிகங்களும், ஆயிரத்து ஐம்பது பாடல்களும்  .ஐந்தாம் திருமுறையில் உள்ளன.
62. .ஐந்தாம் திருமுறையில் பாடப்பெற்றுள்ள தலங்கள் எத்தனை?
     ஏழப்பத்து ஆறு தலங்கள் இடம் பெற்றுள்ளன
63. .ஐந்தாம் திருமுறையிலுள்ள அற்புதத் திரு பதிகங்கள் யாவை?
1.நிற்றறைப்பதிகம் –‘மாசீல் வீணை
2.மறைக்கதவம் திறக்க –‘ பண்ணினேர் மொழியாள்
3.பொதி சோறு பெற்றமை –‘உடையர் கோவணம்
64.ஆறாம் திருமுறையில் உள்ள பதிகங்கள் எத்தனை?
   தொண்ணூற்று ஒன்பது பதிகங்களும், தொள்ளாயிரத்து எண்பது   பாடல்களும் உள்ளன.
65.ஆறாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள தலங்கள் யாவை ?
  ஆறுபத்து ஆறு தலங்கள் இடம் பெற்றுள்ளன.
66.திருத்தாண்ட்டகங்களில் ஸ்ரீஉருத்திரத்திற்கு இணையாக கூறப்படுவது எது ?
    ‘இரு நிலனாய்த் தீயாகிஎனத் தொடங்கம் நின்ற திருதாண்டகம் வேதஃத்தில் உள்ளஸ்ரீ உருத்திரம்என்னும் உபாசனைக்கு இணையானது. இது உருத்திரத்திருத்தாண்டகம் எனப்படுகிறது.
67.திருத்தாண்டகங்களில் மிகச்சிறப்பாக கூறப்படுவது எது?
   ‘போற்றித்திருத்தாண்டகம்மிகச்சிறப்பினை உடையது.
68.ஏழாம் திருமுறையை அருளிச் செய்தவர் யார் ?
   சுந்தரமூர்த்திசுவாமிகள்.
69.ஆலாலசுந்தரர் யார்?
     திருக்கயிலையில் இறைவனுக்கு தொண்டு செய்து வந்தவர்.
70.சுந்தரர் அவதாரம் செய்த காலம் எது ?
   கி.பி .ஒன்பாதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்.           
71. .சுந்தரர் எங்கு அவதாரம் செய்தார் ? பெற்றோர் யாவர்?
    திருநாவலூரில் சடையனார் , இசைஞானியார் என்னும் பெற்றோருக்கு சுந்தரர் அவதாரம் செய்தார்.
72. .சுந்தரரை வளர்த்த மன்னன் யார் ?
    நரசிங்க முனையரையர்.
73. சுந்தரரை இறைவன் எவ்வாறு தடுத்தாண்டார் ?
     சுந்தரரை இறைவன் ஒலைகாட்டி தடுத்து  ஆட்கொண்டார்.
74.இறைவன் காட்டிய ஒலையில் எழதப்பட்டிருந்த செய்தி யாது ?
     வெண்ணெய் நல்லூர்கப் பித்தனுக்கு (இறைவனுக்கு) யானும் என் மரபைச் சேர்ந்தவரும் வழித் தொண்டு(அடிமை) செய்வதற்க்குச்சம்மதித்து ஒலை எழதித்தந்தேன் என்று எழதப்பட்டிருந்த்து.
75 சுந்தரருக்கு திருவடி சூட்டப்பட்ட இடம் எது ?
     திருவதிகைத் தலத்தின் எல்லையில் இருந்த சித்த வடமடம் என்னும் இடமாகும்.
76. பரவையார் , சங்கிலியார் முற்பிறப்பு வரலாற்றை கூறுக ?
   இருவரும் முற்பிறப்பில் கமலினி, நந்திதை என்னும் பெயர்களுடன் கயிலையில் உமாதேவிக்கு தொண்டு செய்து வந்தனர்.
77.பரவையார் எங்கு வாழ்ந்து வந்தார் ?
  பரவையார் திருவாரூரில் வாழ்ந்துவந்தார்
78.சங்கிலியார் எங்கு வாழ்ந்து வந்தார்?
  சங்கிலியார் திருவொற்றியூரில் வாழ்ந்து வந்தார் .
79.தம்பிரான் தோழன் என்று யாருக்கு பெயர்?
   சுந்தரருக்கு தம்பிரான் தோழன் என்று பெயர் .
80. திருத்தொண்டத் தொகை எங்கு யாரால் பாடப்பட்டது ?
     சுந்தரமூர்த்தி சுவாமிகளால்  திருத்தொண்டத் தொகை திருவாரூரில் பாடப்பட்டது .
81.சுந்தரர் சங்கிலியாரை மணக்க என்ன சபதம் செய்து தந்தார்?
  திருவொற்றியூரில் எல்லை தாண்டுவதில்லைஎன்று சபதம் தந்து சங்கிலியாரை மணந்தார் .
82, சபத்தை மீறியதால் என்ன நேர்ந்தது ?
   கண்பார்வையை இழந்தார் .
83. மீண்டும் எப்படி கண்பார்வை பெற்றார் ?
     இறைவனை வேண்டி காஞ்சிபுரத்தில் இடக்கண் பார்வையும், திருவரூரில் வலக்கண் பார்வையும் பெற்றார் .
84. சுந்தரர்  அவநாசியில் நிகழ்த்திய அற்புதம் என்ன ?
முதலையுண்ட பாலனை இறைவனிடம் வேண்டிப் பதிகம் பாடி மீட்டுத்
தந்தார் .
85. சுந்தரருடன் நெருங்கிய தொடர்புடைய மற்றொரு நாயனார் யார் ?
    சேரமான் பெருமான் நாயனார் .
86. சுந்தரர் எவ்விதம் திருக்கயிலைச் சென்றார் ? அப்பொழது அவர் வயதென்ன?
       இறைவனருளால் வெள்ளையானை வர அதன் மீதேறி ஆடிசுவாதி நாளில்   சுந்தரர்  கயிலை சேர்ந்தார் . தன் பதினொட்டாம் வயதில் கயிலைச் சேர்ந்தார் .
87. சுந்தரர் கயிலைச் செல்வதற்கு முதல் நாளே அங்கு சென்றவர் யார்
     பெருமிழலைக் குறும்பர் எனும்யோகி.
88. ஏழாம் திருமுறையில் எத்தனை பதிகங்கள் உள்ளன ?
     பதிகங்கள் நூறு , பாடல்கள் ஆயிரத்து இருப்பத்தாறு .
89. ஏழாம் திருமுறையில் படப்பெற்றுள்ள தலங்கள் எத்தனை ?
   எண்பத்து நான்கு தலங்கள் .
90 . ஏழாம் திருமுறையில் அற்புதத் திருப்பதிகங்கள் யாவை ?
     1.தடுத்தாட் கொள்ளல் – ‘ பித்தாபிறைசூடி
     2. திருவடிசூட்டப்பெறல் – ‘தம்மானை அறியாத
     3. செங்கற்கள் பொன்னாகப் பெற்றல் –‘தம்மையே புகழ்ந்து
     4. ஆற்றில் இட்டு குளத்தில் எடுத்தல் – ‘பொன் செய்த மேனியீர்
     5. காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தல் – ‘ பரவும் பரிசு ஒன்று
     6. முதலையுண்ட பாலகனை மீட்டுத்தருதல் – ‘ ஏற்றான் மறக்கேன்
     7. வெள்ளையானையில் அமர்ந்து கயிலைச் செல்லல் – ‘ தான்   எனைமுன் படைத்தான்’.
91.எட்டாம் திருமுறையை அருளிச் செய்தவர்
   எட்டாம் திருமுறையை அருளிச் செய்தவர் மாணிக்கவாசகர் , அவை திருவாசகமும் ,திருக்கோவையாரும்.
92. மாணிக்கவாசகர் எங்கு எப்பொழது அவதர்த்தார் ?
    மாணிக்கவாசகர் கி,பி , ஒன்பதாம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் , திருவாதவூரில் அவதரித்தார் .
93. மாணிக்கவாசகர் செய்த செயல் யாது ?
  அரிதர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்த இவர் அம்மன்னனுக்கு குதிரைகள் வாங்கும் பொருட்டுக் கொண்டு வந்த தொகையை இறைவனுக்குத் திருப்பெருந்துறையில் கோயில் எழப்பிச் செலவு செய்தார்.
94. மாணிக்கவாசகருக்கு இறைவன் எவ்வாறு அருள் செய்தார் ?
    மாணிக்கவாசகருக்கு இறைவன் திருப்பெருந்துறையில் இருந்து மரத்தின் கீழ்குரு வடிவில் அருள் செய்தார்.
95.பாண்டிய மன்னனிடம் யார் குதிரைகளைச் சேர்ப்பித்தது ?
    சிவபெருமான் மாணிக்கவாசகரைக் காக்கும் பொருட்டு நரிகளைக் குதிரைகளாக்கிக் கொண்டு தானே குதிரை சேவகனாக மன்னிடம் குதிரைகளைக் கொண்டு சேர்ப்பித்தார்.
96.மன்னனின் தண்டனையிலிருந்து மாணிக்கவாசகரை இறைவன் எவ்விதம் காத்தார் ?
 வைகையில் வெள்ளம் பெருக்குகெடுத்து வரச் செய்தும் , மன்சுமந்தும், பிரம்படிபட்டும், இறைவன் மாணிக்கவாசரைக் காத்தார் .
97. திருவாசகத்தை மாணிக்கவாகரை திரும்பப்பாடச் சொல்லி  கேட்டு எழதியவர் யார் ?
 சிவபெருமானே அந்தணர் வடிவில் வந்து மாணிக்கவாசகரிடம் திருவாசகத்தை திரும்ப பாடச் சொல்லி கேட்டு எழதிக்கொண்டு திரு திருக்கோவையாரையும் கூறிச் சொல்லி எழதி திருச்சிற்றம்பலமுடையான் எனக்கையொப்பமிட்டுத்திருக்களிற்று படியில் வைத்து மறைந்தார்.
98.திருவாசகத்தின் பொருளை மாணிக்க வாசகர் எவ்வாறு உணர்ந்தார் ?
 திருவாசகத்தின் பொருள்தில்லைச் சிற்றம்பலவனேஎனக் காட்டி எல்லோரும்  காணத்தில்லை அம்பலத்திற்குள் புக்கு மறைந்தருமளினார் .
99. மாணிக்கவாசகர் எந்தவயதில் இறைவன் திருவடி எய்தினார் ?
   தனது முப்பத்திரண்டாம் வயதில் ஆனிமாத்து மகநாளில் எடுத்த சேவடி கீழ் கலந்தார் .
100. மாணிக்கவாச சுவாகளிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை ?
      1.சிவ பெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும் படிக்கும், மண்சுமந்து அடிபடும் படிக்கும் பெற்றுக்கொண்டது .
       2.புத்தர்கதளைத் தருக்கத்தில் வென்று ஊமைகளாக்கிப்பின் ஊமைதீர்த்துச் சைவர்களாக்கியது .
       3.பிறவிமுதல் ஊமையாஃய் இருந்த பெண்ணை ஊமைதீர்த்துப் புத்தர்கள் வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்த்து.
        4. மாணிக்கவாசகரிடம் திருவாசகத்தையும், திருக்கோவையாரையும்  சிவபெருமானே எழந்தருளிவந்து எழதும்படி பெற்றுக் கொண்டது .
        5.எல்லோரும் காணக் கனகசபையினுள்ளே புகுந்துசிவத்தோடு கலந்தது .
101. திருவாசகத்தில் எத்தனை பதிகங்கள் உள்ளன ?
       திருவாசகத்தில் ஐம்பத்தொரு பதிகங்கள் அறுநூற்று ஐம்பத் தொன்பது பாடல்களும் உள்ளன .
102.திருக்கோவையாரில் எத்தனை பாடல்கள் உள்ளன ?
    நூனூறு பாடல்கள் உள்ளன.
103. திருக்கோவையாரில் இடம் பெற்றுள் தலங்கள் எத்தனை ?
     இருபத்தொரு தலங்கள் .
104.ஒன்பதாம் திருமுறை எதைக்குறிக்கும் ?
      திருவிசைப்பா, திருப்பல்லாண்டைக் குறிக்கும்.
105.திருவிசைப்பா என்றால் என்ன ?
  திரு+இசைப்பா, திரு-தெய்வத்தன்மை, இசை-புகழ் , பாபாடல், தெய்வத்தன்மை உடைய புகழ்ப்பாடல்கள்    
106.ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்கள் யாவர் ?
   திருமாளிகைத்தேவர் , சேந்தனார் , கபருவூர்த்தேவர் , பூந்துருத்திநம்பிகாடநம்பி , கண்டராதித்தர் ,வேணாட்டடிகள் , திருவாலியமுதனார், புருடோத்தமநம்பி , சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர் .
107. ஒன்பதாம் திருமுறையில் எத்தனைப் பதிகங்கள் உள்ளன ?
   இருபத்து ஒன்பது பதிகங்கள் , முந்நூற்றொரு பாடல்கள் உள்ளன .
108. திருமாலிகை தேவர் குறிப்பு வரைக >

      கி,பி, பத்தாம் நூற்றாண்டில் திருவிடைமருதூரில் திருமாளிகைத் தேவர் பிறந்தார் . இவர் நாற்பத்தைந்து பாடல்கள் கொண்ட நான்கு திருவிசைப்பா பதிகங்கள் பாடியுள்ளார் போகநாதரிடம் உபதேசம் பெற்றுச் சித்துக்கள் கைவரப்பெற்றார் , விசும்பில் நீர்க்குடத்தை நிலைக்க வைத்து, கல்நந்திகளை உயிர்த்து எழந்துவரச்செய்தது , வடமின்றித் தேரோட்டச் செய்தது  போன்ற பல சித்துக்களை செய்துள்ளார் திருவாவடுதுறையில் சமாதிநிலை எய்தினார்.                                                                                           - தொடரும் 

      

                          

2 comments:

Unknown said...

Super question and answer are very useful

மணிகண்டன் said...

*சைவ வினாவிடை*

1).இறைவன் இரண்டு அடியார்களை பாராட்டுகிறார். அவர்கள் யார்?

2)திருஞானசம்பந்தர் தன் கையினால் எழுதிய பதிகம் எது?

3)இறைவன் மூன்று இடங்களில் நாயன்மார்களுக்கு அன்னம் பாலிப்பு செய்து உள்ளார். அவை யாவை?

4).இறந்தவர்கள் எத்தனை பேர் நாயன்மார்களால் உயிர் பெற்றனர்?

5).திருஞானசம்பந்தர் ஐயரே என்று யாரை கூறினார்?

6).எந்த காலத்தில் நாயன்மார்கள் அதிகம் வாழ்ந்தனர்?

7).திருவிளக்கேற்றி வழிபாடு செய்தவர்கள் யார்?

8).ஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து வைத்த அடியார் யார்?

9).திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரும் எத்தனை முறை சந்தித்து கொண்டனர்?

10).மூன்று அடியார்கள் இறைவனின் சலங்கை ஒலி கேட்டு மகிந்தனர். அவர்கள் யார்?

11)திருஞானசம்பந்தரிடம் மூன்று தீக்கை பெற்றவர் யார்?

12).பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடல் புராணம் மூன்றுக்கும் உள்ள தொடர்பு என்ன?

13).திருஞானசம்பந்தரே சென்று வரவேற்ற அடியார் யார்?

14).இறைவனை தொட்ட நாயன்மார் யார்?

இந்த சைவ வினாக்களுக்கு தெரிந்த விடைகளை அனுப்பவும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...