காணாபத்தியம்

1.   காணாபதியம் என்றால் என்ன?
கணபதியை முழுமுதல் கடவுளாக வணங்கும் சமயம் காணாபதியம்.


2.   கணபதிக்கு வழங்கும் வேறு சில பெயர்கள் யாவை?
பாலகணகதி,தருணகணபதி,வீரகணபதி,சக்திகணபதி,நிருத்தகணபதி,ஏரம்பகணபதி என பல பெயர்கள் உள்ளன.
3.   கணபதியின் தத்துவம் என்ன?
கணபதியை ஒங்காரத்தின் வடிவம் எனக் கருதுவர்.இவர் நாதவிந்து தத்துவத்தின் நிலை கலன்.
4.   கணபதி வழிபாட்டில் சிறந்து விளங்கியவர்கள் யார்?
ஔவையார்,நம்பியாண்டார்நம்பி முதலியோர் .கணபதி வழிபாட்டில் சிறந்து விளங்கியவர்கள்.
நம்பியாண்டார்நம்பி
ஔவையார்  


               
5.   கணபதியின் கருணைக்கு உதாரணம் கூறு?
கணபதியின் கருணையால் நம்பியாண்டார் நம்பி திருமுறைகள் இருக்கும் இடத்தை அறிந்து வெளிக் கொண்டுவர முடிந்தது.
6.   கணபதியை பற்றிய நூல்கள் யாவை ?
விநாயகர் அகவல் , மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை , மூத்தபிள்ளையார, மும்மணிக்கோவை ,விநாயகர் கவசம் , விநாயகர்நான்மணிமாலை , திருநாரையூர் விநாயகர் திருவீரட்ட மணிமாலை போன்ற பல நூல்கள் உள்ளன.
திருவாக்கும் செய்கருமங் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தங் கை.

தொகுக்க உதவிய  நூல்கள் : விநாயகர் கலைக்களஞ்சியம் , முனைவர் சிவ. திருச்சிற்றம்பலம் 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...