சாக்தம்

1. சாக்தம் என்றால் எந்த தெய்வத்தை வழிபடும் சமயம் ?
சக்தியினை முழுமுதற் கடவுளாகப் பாவித்து வழிபடும் நெறியினைசாக்தம்என அழைத்தனர்.


2. சக்தியை வேறு எவ்விதங்களில் அழைத்தனர்?
போக சக்தி- ‘பராசக்தி’.
வீர சக்தி - ‘துர்கை’.
கோர சக்தி – ‘காளி’.
அதிகார சக்தி – ‘நாராயணி.
அருட் சக்தி – ‘மனோன்மணி’. என்று அழைத்தனர்.
3. சாக்தத் தினைப் பற்றி விளக்கும் நூல் யாது ?
சாக்தத் தினைப் பற்றி விளக்கும் ஆகம நூல்களைத் தந்திரம்என அழைப்பர் . இந்நூல்களில் சக்தியின் வழிபாட்டின் சிறப்புகள் விளக்கப்ப ட்டுள்ளது.
4. சக்தி பீடங்கள் எத்தனை ?
சக்தி பீடங்கள் ஐம்பத்தொன்று.
5. சக்தியை எத்தனை வடிவங்களில் வணங்குகின்றார்கள்?
அருவவடிவம், அருவுருவடிவம், யந்திரவடிவம், உருவடிவம், தியானவடிவம், என பல வடிவங்களில் வணங்குகின்றார்கள்.
6. சக்தியின் அருவவடிவம் எவை?
திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) யோகாம்பிகை உருவவடிவில்லாத அருவவடிவம் , காஞ்சியில் காமாட்சியம்மையின் ஆலயத்திலுள்ள அஞ்சன காமாட்சியும் அருவ வடிவேயாகும்.
7. அருவுருவடிவம், எது?
திருகயிலை மலையின் கண்ணுள்ள மானசரோவர் ஏரி அம்பிகையின் வடிவாக கருதப்படுகிறது, அமர்நாதிலுள்ள பனிவடிவம் , கொல்லூர் கடில்நகரில் (கேரளா) காணப்பெரும் லிங்கவடிவங்கள் ஆகியவை அருவுருவங்களாகும்.
8. யந்திர வடிவங்கள் எவை?
குற்றாலம், அரசூர், திருவானைகா, காஞ்சிபுரம், மாங்காடு,ஆகிய தலங்களில் ஸ்ரீசக்கரமேரு வடிவில் அம்பிகை வணங்கப்பெறுகிறாள்.
9. சக்தியின் தியான வடிவை கூறு?
சித்த சாபரதந்திரம், மாத்ருகாநிகண்டு முதலான சிற்பாகம நூல்களில் அம்பிகையின் வடிவை தியான சுலோகங்களாக கூறப்பட்டுள்ளன.
10. சக்தியை பற்றி கூறும் நூல்கள் எவை?
அபிராமி அந்தாதி , மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், காமாட்சியம்மன் அகவல் , காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, அன்னபூரணி திருவருட்பா, ஸ்ரீதுர்கா அஷ்டகம்,என .சக்தியை பற்றி கூறும் நூல்கள் பல உள்ளன.
11. சக்தி வழிபாட்டில் சிறந்து விளங்கிய சிலரை கூறு ?
அபிராமி பட்டர், ஆதிசங்கரர் , குமரகுருபரர் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றோர் சக்தி வழிபாட்டில் சிறந்து விளங்கினர்.
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல மனோன்மனி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே.

அபிராமி பட்டர்

ஆதிசங்கரர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
தொகுக்க உதவிய நூல்கள் : சக்தி கலைக்களஞ்சியம் - முனைவர். சிவ . திருச்சிற்றம்பலம்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...