1.சிவாலய வழிபாட்டிற்கு எவ்விதம் செல்ல வேண்டும் ?
குளித்து , ‘சிவாய நம ‘ என்று தீருநீறு அணிந்து அர்ச்சனைப்பொருள்களையும், தூபதீபத்திற்குரிய பொருள்களையும் இயன்றவகையில் எடுத்துக்கொண்டு கோயில்களுக்கு செல்லவேண்டும்.
2.கோயிலை அடைந்ததும் செய்ய வேண்டியது என்ன ?
கோயிலை அடைந்ததும் காலணிகளை வெளியில் விட்டு இராஐகோபுரத்தை தூல்லிங்கமாகக் கருதி ‘சிவ சிவ’ என கூறி வணங்கவேண்டும் .
3.கோயிலில் முதலில் என்ன செய்ய வேண்டும் ?
கோயிலின் முதற்கண் கொடிமர விநாயகர் உள்ளார் .அவர்திருமுன் ஆண்களாயின் எட்டுஅவைய வணக்கம் (அட்டாங்க நமஸ்காரமும்) பெண்களாயின் ஐந்துஅவைய வணக்கம் (பஞ்சாங்க நமஸ்காரமும்) செய்ய வேண்டும்.
4. ஐந்துஅவைய வணக்கம் (பஞ்சாங்க நமஸ்காரம்) என்றால் என்ன ?
தலை , இருகைகள் , முழந்தாள்கள் என்றும் ஐந்து உறுப்புகளும் நிலத்தில் தோய வணங்குதல் .
5. எட்டுஅவைய வணக்கம் (அட்டாங்க நமஸ்காரமும்) என்றால் என்ன ?
தலை, கைஇரண்டு, செவிஇரண்டு , மோவாய் ,புயங்கள் இரண்டு என்னும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் பொருந்துமாறு வணங்குதல் .
6.எந்ததிசை நோக்கி வணங்குதல் வேண்டும் ?
கிழக்கு-மேற்கு நோக்கிய சந்நிதிகளாயின் வடக்கே தலைவைத்தும் , தெற்கு – வடக்கு நோக்கிய சந்நிதிகளாயின் கிழக்கே தலை வைத்தும் வணங்குதல் வேண்டும் .
7. எத்தனை முறை வணக்கம் செய்தல் வேண்டும் ?
மூன்று , ஐந்து ,ஏழ, ஒன்பது முறை வணங்குதல் வேண்டும் . கோயிலில் இவ்விடத்தைத் தவிர வேறு எந்தப்பகுதியிலும் கீழே விழந்துவணக்கம் செய்தல் கூடாது .
8. விநாயகரை எவ்விதம் வணங்குதல் வேண்டும் ?
வணக்கம் செய்து எழந்தபின் இருகைகளாலும் தலையில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டு வணங்கவேண்டும், பினகொடிமரத்தை அண்ணாந்துநோக்கி ‘ அரகரசிவசிவ’ என்று வணங்குதல் வேண்டும் .
9.அடுத்து செய்ய வேண்டியது என்ன ?
கொடிமரத்தை அடுத்துள்ள பலிபீடத்தில் நம்முடைய பாவ வினைகளை பலியிட்டதாக கருதி வணங்கிய பின் நந்திதேவரை வணங்கி பின்னர் நால்வர் பெருமக்களைப் போற்றி துதித்து, அடுத்து அடல்அரசரை (நடராசர்) வழிபட்டு கருவறை முன் செல்ல வேண்டும் .
10. கருவறை முன் செய்யும் வழிபாடு யாது?
ஒவ்வொரு சந்நிதிமுன்பும் ஏற்றதுதி பாடல்களை பாடி வழிபடுவது சிறந்து . கருவறையிலுள்ள அருவுருவ வடிவமான சிவனை திருமுறைகளை பாடி வழிபடுவது சிறந்தது . பின் அர்ச்சனைகள் செய்து , தீபதூபங்கள் காட்டி வழிப்படவேண்டும் . பின் உமையம்மையை வணங்குதல் வேண்டும் .
11.தென்முகக் கடவுளை வழிப்படும் முறை என்ன ?
தென்முகக் கடவுளை பாடிபரவி ,தீக்கை பெற்றவர்களாயின் அச்சன்னிதின் முன் அமர்ந்து ஒருமையுடன் திருவைந்தெழத்தை நூற்றுஎட்டு முறை செபித்தல் வேண்டும்.
12.அடுத்து வணங்கவேண்டிய சன்னிதிகள் என்ன ?
அடுத்து அறுபத்து மூவரை வழிப்பட்டு பின் தலவிநாயகர் , முருகன் , திருமால் , திருமகள் ,கலைமகள் ,துர்க்கை , நவக்கிரங்கள் ,சன்டிகேசுவரரை, வணங்கி இறுதியில் பைரவரை வணங்கிவழிபாட்டின் நிறைவாக கொடிமரச்சன்னதியை அடைந்து கீழே விழந்து வணங்கி ராஐகோபுரத்தின் கீழ் அமர்ந்து சிவனருளை சிந்தித்து தியானம் செய்து அதிகாரநந்தியிடம் விடை பெற்றுச் சிவசிந்தனையுடன் இல்லம் திரும்புதல் வேண்டும் .
கோயில் வலம் வரும் முறை |
13.சிவன் கோவிலில் எத்தனை முறை வலம் வருதல் வேண்டும் ?
சிவன் கோவிலில் மூன்று , ஐந்து , ஏழ முதலான முறைகளில்வலம் வருதல் வேண்டும் . அவ்வாறு வலம் வரும் போது நந்திக்கு குறுக்கே செல்லுத கூடாது .
14. கோயில்களில் செய்ய கூடாதவைகள் யாவை ?
1.கோயில்களுக்கு நீராடாமல் செல்வதோ ,நீராடிய பின் ஈர ஆடையுடன் செல்வதோ கூடாது .
2.மூலஸ்தானத்தில் மூர்த்திக்கு அபிசேகம் , நைவேத்தியம் முதலியவை நடக்கும்போது சுவாமிதரிசனம் செய்தல், வலம் வருதல் முதலியன தவிர்த்தல் வேண்டும் .
3.கோயிலில் கிழக்கிலும் , வடக்கிலும் கால்களை நீட்டி நமஸ்காரம் செய்வது கூடாது .
4.நடந்து கொண்டும் , கிடந்து கொண்டும் விபூதிதரித்தல் கூடாது.
5.தீட்டுடன் போதல் ,கோபுர நிழலை மிதித்தல், புகைத்தல், தாம்பூலம் அணிந்து செல்லல்,செருப்பிணிந்து போதல், அசுத்தம் செய்தல் , சிரித்து விளையாடல் , வீண்மொழிபேசுதல் , தூங்குதல் கூடாது .
6.அன்னியர் யாவரேயாயினும் கோயிலுக்குள் வணங்குதல் கூடாது .
யாதொரு தெய்வம் கொண்டீர் ,அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதொரு பாகனார் தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள்
வேதனைப்படும், இறக்கும், மேல்வினையும் செய்யும்
ஆதலான் ,இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே.
தொகுக்க உதவிய நூல்கள் : சைவ சமயக்கலைக்களஞ்சியம் - முனைவர் சிவ. திருச்சிற்றம்பலம்
தொகுக்க உதவிய நூல்கள் : சைவ சமயக்கலைக்களஞ்சியம் - முனைவர் சிவ. திருச்சிற்றம்பலம்
4 comments:
அய்யா இவைகளையும் சேர்த்திருக்கலாம்1) வண்டி வாகனங்களில் செல்பவர்கள் திருக்கோயில் சற்று தொலைவில் வாகனங்களை நிறுத்தி நடந்து செல்ல வேண்டும்என நம் இளைய சமூகத்திற்கு சேர்த்து சொல்லி இருக்கலாம்
This is very useful for yong generation. Thank you.
மிக நன்றாக இருந்தது.
மிக நன்றாக இருந்தது.
Post a Comment