தினம் ஒரு திருமுறை
பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று
பொத்திக்கொண்ட
மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட
முண்மிடற்று
மையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந்
தீர்ப்பவனே.
பொத்திக்கொண்ட
மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட
முண்மிடற்று
மையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந்
தீர்ப்பவனே.
- மாணிக்கவாசகர் (8-6-7)
பொருள்: மிடற்றில் நஞ்சுண்டதால் கருமையையுடையவனே! திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! செம்மேனி உடையவனே ! மங்கலப் பொருளானவனே! சிறியேனது பிறவியை துன்பத்தை நீக்குபவனே, பொய்யவனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி, என் சிறுமையை மறைத்த உண்மைப் பொருளே! என்னை விட்டுவிடுவாயோ?
No comments:
Post a Comment