1. கௌமாரம் என்றால் என்ன?
முருகனை முதற் தெய்வமாகக் கொண்டு வணங்கும் சமயம் கௌமாரம் என்பதாகும்.’முருகு’என்ற சொல் அழகு, இளமை,மணம், தெய்வம் என்றலாம் பொருள்படும்.
2. முருகனின் வேறு பெயர்கள் யாவை?
தொல்காப்பியத்தில் ‘சேயோன்’ என்றும் கலிதொகையில்’சிவகுமரன்’ என்றும் மற்றும் கடம்பன், சேந்தன் ,குமரன், வேலன், குகன். என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
3. முருகனின் ஆறுபடை வீடுகள் யாவை?
திருபரங்குன்றம் , திருச்செந்தூர் , திருவாவினங்குடி., திருவேரகம் , குன்றுதோராடல் , பழமுதிர்ச்சோலை , முருகனின் ஆறுபடை வீடுகள் ஆகும்.
4. முருகனின் தத்துவ விளக்கம் யாது?
முருகனின் ஆயுதமான வேல் ஞானசக்தியாகவும் , வள்ளி இச்சாசக்தியாகவும், தெய்வானை கிரியாசக்தியாகவும் விளங்குகிறது.
5. முருக வழிபட்டிற்கு சிறந்த நூல்களாக விளங்குவது எது?
திருமுருகாற்றுபடை, கந்தர்அநுபுதி, திருபுகழ், கந்தர்களிவெண்பா, சண்முக்கவசம், குமரவேல்பதிற்றுபத்தந்தாதி, சஷ்டிகவசம் முதலிய நூல்கள்.
6. முருகனின் சிறந்த அடியார்கள் யாவர்?
அகத்தியர் , நக்கீரர் , ஔவையார். , அருணகிரிநாதர் , குமரகுருபரர், பாம்பன்சுவாமிகள், கிருபானந்தவாரியார் போன்றவர்கள் சிறந்ந அடியார்களாக விளங்கினார்கள்.
அகத்தியர் |
நக்கீரர் |
அருணகிரிநாதர் |
குமரகுருபரர் |
பாம்பன்சுவாமிகள் |
கிருபானந்தவாரியார் |
7. முருகனின் வரலாற்றை கூறும் நூல் எது?
கச்சியப்ப சிவாச்சாரியர் எழதிய ‘கந்தபுராணம்’ என்னும் நூலாகும்.
8. முருகனின் அற்புத செயலகளில் ஓன்று கூறு?
குமரகுருபரர் பிறந்த முதற் கொண்டு ஐந்து ஆண்டுகள் வரையில் ஊமையாக இருந்தார். அவரை திருச்சந்தூர் முருகன் சந்நிதியில் இட்டு அவர் பெற்றோர்கள் வழிபாடு செய்தனர். செந்திலாண்டவர் குழந்தையின் கனவிற் தோன்றி ‘குருபரா’ என அழைத்தார். அத்தகைய பெயர் பெற்று அந்நிலையில் ‘கந்தர் கலிவெண்பா’ பாடினார் பின் மதுரை சென்று ‘மினாட்சி அம்மை பிள்ளை தமிழ் ‘, வைத்தீசுவரன் கோயிலில்’ முத்துகுமார சவாமி பிள்ளை தமிழ்’ என பாடியுள்ளார். இவை யாவும் மருகன் அருளே.
தொகுக்க உதவிய நூல்கள் : சைவசமயக் கல்வி - தருமபுர ஆதீனம்
தொகுக்க உதவிய நூல்கள் : சைவசமயக் கல்வி - தருமபுர ஆதீனம்
No comments:
Post a Comment