1. சௌரம் என்றால் என்ன?
கதிரவனை வழிப்படும் நெறி சௌரம் எனப்படும்.
2. கதிரவனுக்கு கோயில் எங்கெங்குள்ளது?
ஒரிசா மாநிலத்திலுள்ள கோனார்க் கதிரவன் கோயிலும், தஞ்சை மாவட்டத்திலுள்ள கதிரவனார் (சூரியனார்) கோயிலும் ஆகும்.
கோனார்க் கதிரவன் கோயில் |
கதிரவனார் கோயில் |
3. கதிரவனக்குரிய மந்திரம் என்ன?
ஆதித்ய இருதயம் கதிரவனக்குரிய மந்திரம்.
4. கதிரவனின் உருவத்தை எந்த உலோகத்தில் செய்தல் சிறப்பு?
கதிரவனின் உருவத்தை தாமிரத்தில் செய்து வழிப்படுவதே சிறப்பு .
எங்கும் இருளகற்றி ஏழபரித் தேரேறித்
துங்கமுடன் சுற்றிவரும் சோதிமணிச் சூரியனே
துன்ப இருளகற்றி தூயநலம் திகழ
இன்றே தருவாய் அருள்.
தொகுக்க உதவிய நூல்கள் : சைவ சமயக்கல்வி - தருமபுர ஆதீனம்
தொகுக்க உதவிய நூல்கள் : சைவ சமயக்கல்வி - தருமபுர ஆதீனம்
No comments:
Post a Comment