1.வைணவம் என்றால் என்ன?
திருமாலை வழிப்படும் சமயம் வைணவம்.
2.வைணவத்தின் தத்துவங்கள் எத்தனை?
வைணவத்தின் தத்துவங்கள் மூன்று .அவை சித்து, அசித்து, ஈஸ்வரன் என்பன.
3.சித்து என்றால் என்ன?
சித்து உயிர்களின் தொகுதி.
4.அசித்து என்றால் என்ன?
அசித்து என்றால் அறிவில்லாத பொருள்களைக் குறிக்கும்.
5.ஈஸ்வரன் என்பவன் யார்?
முத்தொழில்களை ஆற்றுபவன் ஈஸ்வரன்.
3. அர்த்த பஞ்சகம் என்றால் என்ன?
1.அடைபவன்- உயிர், 2.அடையபடுத்துவது –திருமால், 3.பயன்- முடிவிலாஇன்பம், 4.உபாயம் – பக்தி ,5.இடையூறு – சாத்திர விரோதமான செயல்கள்.
4.இறைவனது நிலைகள் யாவை?
1.பரத்துவம்- வைகுண்டத்திலுள்ள பரப்பிரம்மம், 2.வியூகம்- உலகில் படைப்பு, அளிப்பு, அழிப்பு முதலிய இயற்றும் ஆத்மசொருபம், 3.விபவம்- அவதார புருஷனாகத் தோன்றும் இறைக்கூறு .4.அந்தர் யாமித்துவம்- உயிர்கள் உள்ளே புக்கிருந்து செயல் படும் இறைக் கூறு .5.அர்சாவதாரம் – அன்பர்கள் தங்கள் விருப்பத்திற்கு இணங்க வழிபடும் இறை கூறு .
5. இறைவனை அடையும் வழிகள் யாவை ?
பக்தி, பிரபக்தி என்ற இரு வழிகள் .1.பக்தி – கருமயோகவழி நின்று ஞானயோகம் பெற்று அதன்மேல் பக்தியோகம் அடைந்து இறைவனை அடைதல்.2. பிரபக்தி –சரணாகதி.
6. ஐந்து உபாயங்கள் யாவை ?
1.தாபம்-ஒரு ஆச்சாரியர் மூலம் சங்கு, சக்கரமுத்திரைகளைக் கைகளில் பொறித்துக் கொள்ளுதல்.
2.புண்டரம்-நெற்றியிலும் மற்றைய அவயங்களிலும் திருமண்(நாமம்) இட்டு கொள்ள அறிதல்.
3.நாமம்- ஆச்சாரியரிடமிருந்து ஒருதாச நாமத்தைப் பெற்றுக் கொள்லுதல்.
4.மந்திரம்- ஆச்சாரியரிடமிருந்து மூன்று மந்திரங்களை உபதேசமாகப் பெறுதல்.
5.அர்சனம்-சாவிகிராமம் முதலிய விஷ்ணுசின்னமாக விளங்கும் பொருளை ஆச்சாரியரிடமிருந்து பெற்று வழிபடுதல்.
7. வைணவத்திற்குரிய நூல்கள் எவை
நாலாயீர திவ்வியப் பிரபந்தம் , பகவத்கீதை ,பஞ்சாராத்திரம் ,விஷ்ணு புராணம் போன்ற பல நூல்கள் உள்ளன .
8. வைணவத்தின் வகைகள் எவை ?
வைணவத்தில் இரண்டு பிரிவுகள் உண்டு அவை வடகலை ,தென்கலை என்பன .
9.வைணவ அடியார்களாக சிறந்து விளங்கியவர் யாவர் ?
பண்ணிரெண்டு ஆழ்வார்கள் பக்தியில் சிறந்து விளங்கினார்கள் .
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலம்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினும் ஆயினசெய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாரயணாவென்றும்
நாமம்.
பண்ணிரெண்டு ஆழ்வார்கள் |
தொகுக்க உதவிய நூல்கள் : சைவ சமயக்கல்வி - தருமபுர ஆதீனம்
No comments:
Post a Comment