தினம் ஒரு திருமுறை
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே யுலகானே யுடலானே யுயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
ஊரானே யுலகானே யுடலானே யுயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
- திருநாவுக்கரசர் (4-13-6)
பொருள்: நீருமாய் நெருப்புமாய் செல்வமுமாய் செல்லும் வழியாய் ஊரும் உலகமும் உடலும் உயிருமாகி இருப்பவனே ! பல திருநாமங்கள் உடையவனே ! பிறை சூடியே ! பிணிகளைப் தீர்க்கும் பெருமானே, அடியேனை ஆட்கொண்டு அருளும் ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேன் .
No comments:
Post a Comment