தினம் ஒரு திருமுறை
பேராத பாசப்
பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத அன்புபெற
ஆதரித்த அம்மடவார்
நீராரும் கெடிலவட
நீள்கரையில் நீடுபெருஞ்
சீராரும் திருவதிகை
வீரட்டா னஞ்சேர்ந்தார்.
பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத அன்புபெற
ஆதரித்த அம்மடவார்
நீராரும் கெடிலவட
நீள்கரையில் நீடுபெருஞ்
சீராரும் திருவதிகை
வீரட்டா னஞ்சேர்ந்தார்.
-திருநாவுக்கரசர் புராணம் (42)
பொருள்: பாசக் கட்டு நீங்குமாறு, சிவபெரு மானிடத்தே மீதூர்ந்த அன்பு கொண்ட திலகவாதியம்மையார் , புண்ணியத் தன்மை வாய்ந்த, திருக்கெடிலம் ஆற்றின் நீண்ட வடகரையில் அமைந்திருக்கும் நீடும் பெருஞ்சிறப்பு மிக்க திருவதிகை வீரட் டானத்தை அடைந்தார்.
No comments:
Post a Comment