தினம் ஒரு திருமுறை
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
யான்இன் றிரக்கின்றதே.
கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
யான்இன் றிரக்கின்றதே.
- திருக்கோவையார் (8-15,12)
பொருள்: ஒளியார்ந்த மதியே; தில்லைக்கணுளனாகிய தொல்லோனது அருளுடையா ரல்லாதாரைப்போலக் கண்ணோட்டமின்றிப் போனவர் போதலா லுண்டாகிய இன்னாமையை நீயேகண்டாய் யான் சொல்ல வேண்டுவதில்லை; வளைகணிறுத்த நிற்கின்றன வில்லை; நெஞ்சு நெகிழ்ந்துருகாநின்றது; நெடுங்கண் கடுயிலாவாய்க் கண்ணீர்த்துளியாகிய கதிர் முத்தங்களை அவர்க்குச் சொல்வாயாக; இது நின்னை யானின்றிரக் கின்றதிது என்றவாறு
No comments:
Post a Comment