தினம் ஒரு திருமுறை
மன்னுதபோ தனியார்க்குக்
கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை
ஒழிநீஉன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி
எமையடையத் தவம்முயன்றான்
அன்னவனை இனிச்சூலை
மடுத்தாள்வம் எனஅருளி.
கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை
ஒழிநீஉன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி
எமையடையத் தவம்முயன்றான்
அன்னவனை இனிச்சூலை
மடுத்தாள்வம் எனஅருளி.
-திருநாவுக்கரசர் புராணம் (48)
பொருள்: அப்பெருமாட்டி யார்தம் கனவில், இளமையான ஆனேற்றை உடைய சிவபெருமான் எழுந்தருளி, நீ உன்னுடைய மனக் கவலையை ஒழிவாயாக, உன் தம்பி முன்னமே ஒரு முனிவனாக இருந்து எம்மை அடைவதற்குத் தவம் செய்தனன், இனி அவனுக்குச் சூலை நோய் தந்து ஆட் கொள் வோம் என அருளிச் செய்தார்
No comments:
Post a Comment