தினம் ஒரு திருமுறை
பிணையுங் கலையும்வன் பேய்த்தே
ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
டேகினெம் பைந்தொடிக்கே.
ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
டேகினெம் பைந்தொடிக்கே.
-திருக்கோவையார் (8-16,9)
பொருள்:- பிணையுங் கலையும் மிக்க நீர் வேட்கையால்; நிரம்பிய அத்தமும் பெரிய பேய்த்தேரினைச் சென்றணுகும் முரம்பா னிரம்பிய சுரமும்; ஐயனே; நின்னொடு சொல்லின் மெய்யாக எம்பைந்தொடிக்கு; ஒப்பு மெல்லையு மில்லாத இறையோனுறைகின்ற தில்லை வரைப்பிற் பூக்களையுடைய குளிர்ந்த மருதநிலமும் பொய்கையு மல்லவோ! நீயிவ்வாறு கூறுவதென்னை
No comments:
Post a Comment