தினம் ஒரு திருமுறை
ஒராக மிரண்டெழி லாயொளிர்
வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
யேயெம ரெண்ணுவதே.
வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
யேயெம ரெண்ணுவதே.
-திருக்கோவையார் (8-16,1)
பொருள்: ஒருமேனி பெண்ணழகு மாணழகுமாகிய விரண்டழகாய் விளங்குமவனது தில்லைக் கணுளளாகிய வொண்ணு தலுடைய; பூசப் படுவன பயின்று; அமிர்தத்தைப் பொதிந்து; நெய்த்த சுணங்காகிய செம்பொன்னின் பொடியைச் சிதறின முலைகள்; இப்படியே பெருத்த கதிர்ப்பைக்கண்டால்; வள்ளலே; எமர் எண்ணுவது இல்லையே இவண் மாட்டெமர் நினைப்பதில்லையே?
No comments:
Post a Comment