தினம் ஒரு திருமுறை
கூனற்பிறை சடைமேன்மிக வுடையான்கொடுங் குன்றைக்
கானற்கழு மலமாநகர் தலைவன்னல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே
- திருஞானசம்பந்தர் (1-14-11)
பொருள்: பிறையை சடைமுடிமீது அணிந்த சிவபிரானது திருக்கொடுங்குன்றைக், கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட சீர்காழி (கழுமல) நகரின் தலைவனும், கவுணியர் கோத்திரத்தில் தோன்றியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலைகளை பாடி வழிபட வல்லவர் குறைபாடுகள் நீங்கித்துன்பங்கள் அகன்று உலகம் போற்றும் புகழுடையோராவர்.

No comments:
Post a Comment