தினம் ஒரு திருமுறை
பாட வேண்டும்நான் போற்றி நின்னையே
பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்
காட வேண்டும்நான் போற்றி அம்பலத்
தாடு நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்
வீடவேண்டும்நான் போற்றி வீடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.
- மாணிக்கவாசகர் (8-5-100)
பொருள்: நான் உன்னைப் பாடு வேண்டும். பாடிப்பாடி நைந்து உருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும். நான் அம்பலத்தாடும் உன் மலர்க்கழல் அடையும்படி செய்தல் வேண்டும். இந்த உடம்பை ஒழித்து நீ எனக்கு வீடுப்பேற்றை தந்தருளல் வேண்டும். உன்னை நான் வணங்குகிறேன்.

No comments:
Post a Comment