தினம் ஒரு திருமுறை
கற்பனை கடந்த சோதி
கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.
- சேக்கிழார் (12-2-2)
பொருள் : கற்பனைகளையெல்லாம் கடந்து நிற்கும் சோதியாகிய இறைவன், தன் கருணையால் வடிவு கொண்டு, எல்லோருக்கும் அற்புதம் விளைக்கும் திருக்கோலத்தில், அரிய மறைகளின் முடிவாக உள்ள உபநிடதங்கட்கும் உச்சியின் மேலாய் நிற்கும் ஞான ஒளி வடிவாய் விளங்கும் திருச்சிற்றம்பலத்துள் நிலைத்து நின்று, பொருந்த நடனம் செய்தருளும் திருவடிகட்கு, என் வணக்கத்தைப் தெரிவித்துக் கொள்கிறேன்

No comments:
Post a Comment