தினம் ஒரு திருமுறை
கடையவ னேனைக் கருணையி னாற்கலந்
தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல்
வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத்
தாங்கிக்கொள்ளே.
- மாணிக்கவாசகர் (8-6-1)
பொருள்: கடையேனைப் கருணையால், வந்து ஆண்டு கொண்டருளினை. இடபவாகனனே! அடியேனை விட்டுவிடுவாயா? வலிமையுடைய, புலியின்தோலாகிய ஆடையை உடுத்தவனே! திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! சடையையுடையவனே! சோர்ந்தேன்; எம்பெருமானே! என்னைத் தாங்கிக் கொள்வாயாக.