25 May 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் மிடர்தீர்க்குங்
கருப்ப றியலூர்க்
குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலைக்
கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை மனத்தினா லன்புசெய்
தின்ப மெய்தி
மலைமலிந்த தோளூரன் வனப்பகையப் பன்னுரைத்த
வண்ட மிழ்களே.
 
                 -சுந்தரர்  (7-30-11)
 
பொருள்:  திருக்கருப்பறியலூரில் உள்ள ,குலைகள் நிறைந்த தென்னை மரங்களையும் , தேன் ஒழுகுகின்ற பூஞ்சோலைகளையும் உடைய கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , இலைத் தன்மை மிகுந்த மழுப்படையை உடைய இறைவனை , ` வனப் பகை ` என்பவளுக்குத் தந்தையாகிய மலைபோலும் தோள்களையுடைய நம்பியாரூரன் மனத்தினால் நினைத்தலாகிய அன்புச் செயலைச் செய்து , அதனானே இன்பமுற்றுப் பாடிய வளப்பமான இத்தமிழ்ப் பாமாலையே ,  கற்றவர்களாகிய கல்வி மிக்க தமிழ்ப் புலவர்களது துன்பத்தினைக் களையும் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...