19 May 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திங்கள்சேர் சடையார் தம்மைச்
சென்றவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த
அருள்திரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச்
சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல்
பொருவில்அன் புருவம் ஆனார்.

                    -கண்ணப்ப நாயனார் புராணம்  (104)

 

பொருள்: இளம் பிறையைச் சூடிய சடையராய பெருமானாரைக் காண்பதற்கு முன்னமேயே, அழகிய நெற்றிக் கண்களையுடைய பெருமானாரின் கருணை கூர்ந்த அருள் பார்வை அவர்மீது பொருந்த, இப்பிறவியில் முன்னர்ச் சார்ந்திருந்த பற்றுக்கள் அனைத்தும் நீங்க, பொங்கி எழும் ஒளியின் நீழலில் ஒப்பற்ற அன்புருவமாக ஆயினார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...