12 May 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு  திருமுறை

பொய்யாத வாய்மையாற் பொடிபூசிப் போற்றிசைத்துப்
பூசை செய்து
கையினால் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தங்
கருப்ப றியலூர்க்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலுங்
கொகுடிக் கோயில்
ஐயனைஎன் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.
 
                              - சுந்தரர் (7-30-6)

 

பொருள்: பொய் பேசாத வாய்மையான உள்ளத்தோடு திரு நீற்றை அணிந்து , ` போற்றி ` எனச் சொல்லிப் பூசை செய்து  தங்கள் கையாலே தீயை எரிவித்து வேத ஒழுக்கத்தை வளர்க்கின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள , கொய்தல் பொருந்திய பூஞ்சோலைகளில் குயில்கள் கூவ , அவற்றோடு மயில்கள் ஆடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனாகிய இறைவனை யான் என் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியவன் ஆகின்றான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...