தினம் ஒரு திருமுறை
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியு மந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியு மந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.
-திருநாவுக்கரசர் (4-38-9)
பொருள்: பூதகணங்ள் பல உடையவராய் , வெண்ணீறு அணிந்தவராய் , இசைப்பாடல்களை அடியவர் பாட வைத்தவராய் , இசைக்குச் சிறப்பிடம் வழங்கியவராய் , தம் திருவடிகளை அடியவர்கள் முன் நின்று போற்றி வழிபடச் செய்பவராய் , தம்மையே ஆதியும் அந்தமுமாக வைத்தவ ராய் உள்ளார் எம் தலைவராகிய ஐயாறனார்!
No comments:
Post a Comment