தினம் ஒரு திருமுறை
பூணெடுநாக மசைத்தனலாடிப் புன்றலையங்கையி லேந்தி
ஊணிடுபிச்சையூ ரையம் முண்டியென்று பலகூறி
வாணெடுங்கண்ணுமை மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தாணெடு மாமலரிட்டுத் தலைவனதாணிழல் சார்வோம்.
ஊணிடுபிச்சையூ ரையம் முண்டியென்று பலகூறி
வாணெடுங்கண்ணுமை மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தாணெடு மாமலரிட்டுத் தலைவனதாணிழல் சார்வோம்.
-திருஞானசம்பந்தர் (1-40-3)
பொருள்: பாம்பை அணிகலனாகப் பூண்டு, அனலைக் கையின்கண் ஏந்தி, பிரமனது தலையோட்டை அழகிய கையொன்றில் ஏந்திப் பல ஊர்களிலும் திரிந்து மக்கள் உணவாகத் தரும் பிச்சையைத் தனக்கு உணவாக ஏற்றுப் பற்பலவாறு கூறிக்கொண்டும், வாள் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாக ஏற்று விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று அப்பெருமான் திருவடிகளில் சிறந்த மலர்களைத் தூவித் தலைவனாக விளங்கும் அவன் தாள் நிழலைச் சார்வோம்.
No comments:
Post a Comment