29 May 2015
தினம் ஒரு திருமுறை
தினம் ஒரு திருமுறை
சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்
ஓரா தகலல் உறாதென்று சீராலே
ஓரா தகலல் உறாதென்று சீராலே
அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் முந்துறவே
மைந்தர் மனங்கவரும் என்பதனால் முந்துறவே
-சேரமான் பெருமாள் நாயனார் (11-8-157,158)
28 May 2015
தினம் ஒரு திருமுறை
தினம் ஒரு திருமுறை
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.
- (10-10-1)
பொருள்: புலாலை உண்பரை எமதுதர்கள் தீயாகிய நரகத்தில் எல்லோரும் காணுமாறு தள்ளி வைப்பார்
27 May 2015
தினம் ஒரு திருமுறை
தினம் ஒரு திருமுறை
மின்னார் உருவம் மேல்வி ளங்க
வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
நின்றது போலும்என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
தென்றில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை
என்றுகொல் எய்துவதே.
வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
நின்றது போலும்என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
தென்றில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை
என்றுகொல் எய்துவதே.
-கண்டரதித்தர் (9-20-1)
பொருள்: மின்னல் போல ஒளிவீசும் மகளிருடைய வடிவங்கள் மாடங்களின் மேல்நிலையில் விளங்கவும், வெண்கொடி கள் அம்மாளிகைகளைச் சுற்றிலும் பறக்கவும் அமைந்த அழகான தில்லை என்ற திருத்தலத்தில், பொன்னாலாகிய மலை ஒன்று வந்து அவ்வூரில் தங்கிவிட்டது போலும் என்று கருதுமாறு, தென்னா என்று இசைஒலியை எழுப்பி வண்டுகள் பாடும் அவ்வூரின் பொன்னம்பலத் தில் எழுந்தருளியிருக்கும், என் கிட்டுதற்கரிய அமுதமாகிய எங்கள் தலைவனை அடியேன் என்று எய்துவேன் ?
26 May 2015
தினம் ஒரு திருமுறை
தினம் ஒரு திருமுறை
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.
-மாணிக்கவாசகர் (8-14-15)
பொருள்: கதிரவனது பற்களைத் தகர்த்த விதத்தைக் குறித்தும் வேள்வி கலக்கமடைந்ததைக் குறித்தும் உந்தீபறப்பாயாக!
25 May 2015
தினம் ஒரு திருமுறை
தினம் ஒரு திருமுறை
கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் மிடர்தீர்க்குங்
கருப்ப றியலூர்க்
குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலைக்
கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை மனத்தினா லன்புசெய்
தின்ப மெய்தி
மலைமலிந்த தோளூரன் வனப்பகையப் பன்னுரைத்த
வண்ட மிழ்களே.
கருப்ப றியலூர்க்
குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலைக்
கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை மனத்தினா லன்புசெய்
தின்ப மெய்தி
மலைமலிந்த தோளூரன் வனப்பகையப் பன்னுரைத்த
வண்ட மிழ்களே.
-சுந்தரர் (7-30-11)
பொருள்: திருக்கருப்பறியலூரில் உள்ள ,குலைகள் நிறைந்த தென்னை மரங்களையும் , தேன் ஒழுகுகின்ற பூஞ்சோலைகளையும் உடைய கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , இலைத் தன்மை மிகுந்த மழுப்படையை உடைய இறைவனை , ` வனப் பகை ` என்பவளுக்குத் தந்தையாகிய மலைபோலும் தோள்களையுடைய நம்பியாரூரன் மனத்தினால் நினைத்தலாகிய அன்புச் செயலைச் செய்து , அதனானே இன்பமுற்றுப் பாடிய வளப்பமான இத்தமிழ்ப் பாமாலையே , கற்றவர்களாகிய கல்வி மிக்க தமிழ்ப் புலவர்களது துன்பத்தினைக் களையும் .
21 May 2015
தினம் ஒரு திருமுறை
தினம் ஒரு திருமுறை
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியு மந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியு மந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.
-திருநாவுக்கரசர் (4-38-9)
பொருள்: பூதகணங்ள் பல உடையவராய் , வெண்ணீறு அணிந்தவராய் , இசைப்பாடல்களை அடியவர் பாட வைத்தவராய் , இசைக்குச் சிறப்பிடம் வழங்கியவராய் , தம் திருவடிகளை அடியவர்கள் முன் நின்று போற்றி வழிபடச் செய்பவராய் , தம்மையே ஆதியும் அந்தமுமாக வைத்தவ ராய் உள்ளார் எம் தலைவராகிய ஐயாறனார்!
20 May 2015
தினம் ஒரு திருமுறை
தினம் ஒரு திருமுறை
பூணெடுநாக மசைத்தனலாடிப் புன்றலையங்கையி லேந்தி
ஊணிடுபிச்சையூ ரையம் முண்டியென்று பலகூறி
வாணெடுங்கண்ணுமை மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தாணெடு மாமலரிட்டுத் தலைவனதாணிழல் சார்வோம்.
ஊணிடுபிச்சையூ ரையம் முண்டியென்று பலகூறி
வாணெடுங்கண்ணுமை மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தாணெடு மாமலரிட்டுத் தலைவனதாணிழல் சார்வோம்.
-திருஞானசம்பந்தர் (1-40-3)
பொருள்: பாம்பை அணிகலனாகப் பூண்டு, அனலைக் கையின்கண் ஏந்தி, பிரமனது தலையோட்டை அழகிய கையொன்றில் ஏந்திப் பல ஊர்களிலும் திரிந்து மக்கள் உணவாகத் தரும் பிச்சையைத் தனக்கு உணவாக ஏற்றுப் பற்பலவாறு கூறிக்கொண்டும், வாள் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாக ஏற்று விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று அப்பெருமான் திருவடிகளில் சிறந்த மலர்களைத் தூவித் தலைவனாக விளங்கும் அவன் தாள் நிழலைச் சார்வோம்.
19 May 2015
தினம் ஒரு திருமுறை
தினம் ஒரு திருமுறை
திங்கள்சேர் சடையார் தம்மைச்
சென்றவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த
அருள்திரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச்
சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல்
பொருவில்அன் புருவம் ஆனார்.
-கண்ணப்ப நாயனார் புராணம் (104)
திங்கள்சேர் சடையார் தம்மைச்
சென்றவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த
அருள்திரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச்
சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல்
பொருவில்அன் புருவம் ஆனார்.
-கண்ணப்ப நாயனார் புராணம் (104)
பொருள்: இளம் பிறையைச் சூடிய சடையராய பெருமானாரைக் காண்பதற்கு முன்னமேயே, அழகிய நெற்றிக் கண்களையுடைய பெருமானாரின் கருணை கூர்ந்த அருள் பார்வை அவர்மீது பொருந்த, இப்பிறவியில் முன்னர்ச் சார்ந்திருந்த பற்றுக்கள் அனைத்தும் நீங்க, பொங்கி எழும் ஒளியின் நீழலில் ஒப்பற்ற அன்புருவமாக ஆயினார்.
18 May 2015
தினம் ஒரு திருமுறை
தினம் ஒரு திருமுறை
வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் கோல
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் கோல
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
அணிஏறு தோளானைக் கண்டாங் கணியார்ந்த
அணிஏறு தோளானைக் கண்டாங் கணியார்ந்த
-சேரமான் பெருமாள் நாயனார் (11-8-125,126)
15 May 2015
Subscribe to:
Posts (Atom)