தினம் ஒரு திருமுறை
முத்து வயிரமணி மாணிக்க
மாலைகண்மேற்
றொத்து மிளிர்வனபோற் றூண்டு
விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும்
எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க
மாயிற்றே.
மாலைகண்மேற்
றொத்து மிளிர்வனபோற் றூண்டு
விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும்
எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க
மாயிற்றே.
- பூந்துருத்திகாடநம்பி (9-19-1)
பொருள்: முத்து, வயிரம், மாணிக்கம் என்ற மணிகளால் செய்யப்பட்ட மாலையின் ஒளிவீசுவது போன்றும், விளக்கின் ஒளி போன்றும், எல்லாத் திசைகளிலும் உள்ள தேவர்கள் போற்றிப்புகழும் தில்லைத் தலத்தில் உள்ள, ஒளிவீசும் பொன்னம்பலம் எம்பெருமானுக்கும் திருக்கூத்து நிகழ்த்தும் அரங்கமாக ஆயிற்று.
No comments:
Post a Comment