தினம் ஒரு திருமுறை
நாணனே தோன்றும் குன்றில்
நண்ணுவேம் என்ன நாணன்
காணநீ போதின் நல்ல
காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக்கா ளத்தி
மலைமிசை யெழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர்
இருப்பர்கும் பிடலாம் என்றான்.
நண்ணுவேம் என்ன நாணன்
காணநீ போதின் நல்ல
காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக்கா ளத்தி
மலைமிசை யெழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர்
இருப்பர்கும் பிடலாம் என்றான்.
-கண்ணப்பநாயனார் புரணாம் (96)
பொருள்: நாணனே, இதோ தெரிகின்ற மலைமேல் செல்வோம் என்று கண்ணப்ப நாயனார் கூற , நாணனும், `நீ அம்மலைக்குச் செல்வாயாயின் நல்ல காட்சியையே காண்பாய். வானுயர எழுந்த திருக்காளத்தி மலையின் மேல், எவர்க்கும் அருள் புரிதலில் மாறு படுதல் இல்லாத குடுமித்தேவர் என்னும் பெருமான் இருப்பர். கும்பிடலாம் என்றான்.
No comments:
Post a Comment