தினம் ஒரு திருமுறை
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து
திறம்பா வண்ணம்
கைம்மாவி னுரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக்
கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங்
கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.
திறம்பா வண்ணம்
கைம்மாவி னுரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக்
கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங்
கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.
- சுந்தரர் (7-30-1)
பொருள்: யானைத் தோலைப் போர்த்துநின்ற காலத்தில் உமையவள் அஞ்ச , அதனைக் கண்டு நின்றவனும் , திருக்கருப்பறியலூரில் உள்ள , தளிர் கிள்ளுதற்குரிய மாமரங்களில் இருந்து குயில்கள் பாட , கீழே மயில்கள் ஆடுகின்ற சோலைகளையுடைய கொகுடிக் கோயிலில் எழுந்தருளியுள்ள எம்பெருமானும் ஆகிய இறைவனை , கண்களைச் சிறிது மூடியிருந்து உள்ளத்தில் அன்போடு நிலை பெயராது இருத்தி , இவ்வாறு மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .
No comments:
Post a Comment