தினம் ஒரு திருமுறை
களையா உடலோடு சேரமான்
ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை
மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா
யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின்
ஆடரங்கே.
ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை
மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா
யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின்
ஆடரங்கே.
-பூந்துருத்தி காடநம்பி (9-19-5)
பொருள்: இந்த உயிருள்ள உடலோடும் சேரமான் பெருமாள் நாயனாரோடும் ஆரூரன் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனார் மதத்தை நீங்காத வெள்ளை யானையைக் கயிலை மலையை அடைவதற்கு இவர்ந்து செல்லவும், இளம்பிறையைச் சூடிய பெருமானே! நீ தில்லை மூவாயிரவரோடும் கலந்து விளையாடுகின்ற திருச்சிற்றம்பலமே உனக்குக் கூத்தாட்டு நிகழ்த்தும் அரங்கமாக உள்ளது.
No comments:
Post a Comment