தினம் ஒரு திருமுறை
செல்வம் மேவிய நாளி லிச்செயல்
செய்வ தன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குர வான போதினும்
வல்லர் என்றறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்லம
றைந்து நாடொறு மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக
உன்னி னார்தில்லை மன்னினார்.
செய்வ தன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குர வான போதினும்
வல்லர் என்றறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்லம
றைந்து நாடொறு மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக
உன்னி னார்தில்லை மன்னினார்.
- சேக்கிழார் (இளையான்குடிமாற நாயனார் புராணம் - 6)
பொருள்: செல்வம் பெருகியிருந்த காலத்தில் இவ்வாறு அடியவர் வழிபாட்டைச் செய்துவந்ததன்றி, வறுமையிலும் , தமக்குரிய உண்மை யான பத்திமையால் இவ்வாறு செய்வரென்பதை எல்லோருக்கும் அறிவிக்கும் பொருட்டு, வளத்தால் உயர்ந்த இவர் செல்வம் மெல்ல மெல்லக் குறைந்து நாள்தோறும் நலிய , தில்லைமாநகரில் வீற்றிருந்தருளும் சிவ பெருமான் எண்ணினார்.
No comments:
Post a Comment