தினம் ஒரு திருமுறை
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.
- திருமூலர் (10-1-9)
பொருள்: சிவபெருமானது நிலையை ஒருவராலும் அளத்தற்கரிது என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணாது அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.
No comments:
Post a Comment