தினம் ஒரு திருமுறை
பேணி நாடத னிற்றிரி
யும்பெரு மான்றனை
ஆணை யாஅடி யார்கள்
தொழப்படும் ஆதியை
நாணிஊரன் வனப்பகை யப்பன்வன்
றொண்டன்சொல்
பாணி யால்இவை ஏத்துவார்
சேர்பர லோகமே.
யும்பெரு மான்றனை
ஆணை யாஅடி யார்கள்
தொழப்படும் ஆதியை
நாணிஊரன் வனப்பகை யப்பன்வன்
றொண்டன்சொல்
பாணி யால்இவை ஏத்துவார்
சேர்பர லோகமே.
- சுந்தரர் (7-12-11)
பொருள்: நாடுகளில் விரும்பித் திரியும் பெருமானும் , அடியார்கள் தமக்குத் தலைவனாக அறிந்து தொழப்படுகின்ற முதல்வனும் ஆகிய இறைவனை , நாணுடையவளாகிய ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையும் , இறைவன்முன் வன்மை பேசிப் பின் அவனுக்குத் தொண்டன் ஆகியவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைத் பாடித் துதிப்பவர் சிவலோகத்தை அடையலாம்.
No comments:
Post a Comment