தினம் ஒரு திருமுறை
ஒண்மைய னேதிரு நீற்றைஉத் தூளித்
தொளிமிளிரும்
வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய்
யடியவர்கட்
கண்மைய னேஎன்றுஞ் சேயாய் பிறற்கறி
தற்கரிதாம் பெண்மைய னேதொன்மை ஆண்மைய னேஅலிப் பெற்றியனே.
தொளிமிளிரும்
வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய்
யடியவர்கட்
கண்மைய னேஎன்றுஞ் சேயாய் பிறற்கறி
தற்கரிதாம் பெண்மைய னேதொன்மை ஆண்மைய னேஅலிப் பெற்றியனே.
- மாணிக்கவாசகர் (8-6-22)
பொருள்: ஒளியாயானவனே ! திருவெண்ணீற்றை நிறையப் பூசி மிளிரும் வெண்மை நிறம் உடையவனே! மெய்யடி யார்க்குப் பக்கத்தில் இருப்பவனே! அடியாரல்லாத ஏனையோர்க்கு தொலைவில் இருப்பவனே! அறிதற்கரியதாகிய பொருளாய் இருப்பவனே! பழமையானவனே! பெண்ணாய், ஆணாய் , அலித் தன்மையாய் இருப்பவனே! என்னை விட்டுவிடுவாயோ?
No comments:
Post a Comment