தினம் ஒரு திருமுறை
மீள மீள இவ்வண்ணம்
வெண்பால் சொரிமஞ் சனமாட்ட
ஆள உடையார் தம்முடைய
அன்ப ரன்பின் பாலுளதாய்
மூள அமர்ந்த நயப்பாடு
முதிர்ந்த பற்று முற்றச்சூழ்
கோளம் அதனில் உள்நிறைந்து
குறித்த பூசை கொளநின்றார்.
- சண்டேசுவரநாயனார் புராணம் (35)
மீள மீள இவ்வண்ணம்
வெண்பால் சொரிமஞ் சனமாட்ட
ஆள உடையார் தம்முடைய
அன்ப ரன்பின் பாலுளதாய்
மூள அமர்ந்த நயப்பாடு
முதிர்ந்த பற்று முற்றச்சூழ்
கோளம் அதனில் உள்நிறைந்து
குறித்த பூசை கொளநின்றார்.
- சண்டேசுவரநாயனார் புராணம் (35)
பொருள்: மீண்டும் மீண்டும் இவ்வண்ணமே பாலைத் திருமுழுக்கு ஆட்டிட, அவரை அடிமையாகக் கொண்டிருக்கும் பெருமானும், தம் அன்பர் விசாரசருமரின் அன்பின் பாலராக நின்று, அவர் பூசனையால் அமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றிட, அங்கு ஆத்திமர நீழலின் கீழாக அமைந்த, வெண்மணலின் சிவலிங்கத் திருமேனியின் உள் நிறைந்து நின்று, அவர் புரியும் பூசனையை ஏற்ற நின்றார்
No comments:
Post a Comment