தினம் ஒரு திருமுறை
யானே இனியிந் நிரைமேய்ப்பன்
என்றார் அஞ்சி இடைமகனும்
தானேர் இறைஞ்சி விட்டகன்றான்
தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேராயம்
அளிப்பா ராகிப் பைங்கூழ்க்கு
வானே யென்ன நிரைகாக்க
வந்தார் தெய்வ மறைச்சிறுவர்.
- சண்டேசுவரநாயனார் புராணம் (24)
பொருள்: நானே இப்பசுக்களின் கூட்டத்தினை மேய்ப்பேன் எனக் கூறினார் விசாரசருமர். அது கேட்டு அஞ்சிய இடையனும் அவரை வணங்கி, அப்பசு மேய்த்தலை விட்டு நீங்கி னான். இப்பால், மறைவழி நிற்கும் அச்சிறுவராய விசாரசருமர் தாமும், அங்குள்ள மறையவரின் இசைவு பெற்றுப், பசுக்கள் நெருங்க இருக்கும் அப்பெருங் கூட்டத்தினை மேய்த்திடுவாராகி, பசிய பயிர் களுக்கு வானின் மழை, இன்பம் பயக்குமதுபோல, அப்பசுக்களின் நிரைகளைக் காத்திட முற்பட்டார்;
No comments:
Post a Comment