தினம் ஒரு திருமுறை
அக்கின்ற வாமணி சேர்கண்டன்
அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச்
செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங்
காகுமுனக்கவளே.
அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச்
செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங்
காகுமுனக்கவளே.
-திருக்கோவையார் (8-8,2)
பொருள்: அக்காகிய நல்ல மணிபொருந்திய மிடற்றையுடையான்; அவனது பொதியின் மலயத்தின் கணுளராகிய இக்குன்ற வாணருடைய மகளாகிய வளவிய இத்தண்புனங் காவனுடையாள்; அக்குன்றத்தின்கணுண் டாகிய ஆற்றைமேவி ஆடப் போயினாள் ; ஆறு நின்னு றுப்புக்கள் அவளுறுப்புக்களாகிய அவற்றை யேயொக்கின்றபடி; உனக்கு அவள் இணங்கு ஆகும் நினக்கு அவளிணங்காகும்; அதனால் அவளைக் கண்டு போவாயாக
No comments:
Post a Comment