தினம் ஒரு திருமுறை
நீதியா னினைப்பு ளானை நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்கவெண் ணீற் றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா விளக்கினை யளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.
சாதியைச் சங்கவெண் ணீற் றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா விளக்கினை யளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.
- திருநாவுக்கரசர் (4-74-7)
பொருள்: நீதிப்படி தியானிக்கப்படுபவனாய் , சாதி மாணிக்கமாய் , சங்கைப்போன்ற வெண்ணீற்றை அணிந்த தலைவனாய் , வானத்திலுள்ள தேவர்களுக்குச் சோதியாய் , தூண்டா விளக்காய் உள்ள , ஒருவராலும் அளக்கமுடியாத ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .
No comments:
Post a Comment