தினம் ஒரு திருமுறை
பத்துமோ ரிரட்டி தோளான் பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோ ரிரட்டி தோள்கள் படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப் பரிந்தவற் கருள் கொடுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்து நனிபள்ளிப் பரம னாரே.
பத்துமோ ரிரட்டி தோள்கள் படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப் பரிந்தவற் கருள் கொடுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்து நனிபள்ளிப் பரம னாரே.
-திருநாவுக்கரசர் (4-70-9)
பொருள்: பக்தர்கள் முன் நின்று துதித்துப் புகழும் நனிபள்ளிப் பெருமான் இருபது தோள்களை உடைய இராவணன் தன் பெருமையைப் பரக்கச் சொல்லிக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட , இருபது தோள்களை உடைய அவன் உடல் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றிப் பின் அவன் தன் பத்து வாய்களாலும் இசைப் பாடல்களைப் பாட அவனுக்கு அருள் செய்தவர் ஆவர் .
No comments:
Post a Comment