தினம் ஒரு திருமுறை
முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும் மேத்தும்
படியார்பவள வாயார்பலரும் பரவிப் பணிந்தேத்தக்
கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாரும்
கடியார்சோலைக் கலவமயிலார் காரோ ணத்தாரே.
படியார்பவள வாயார்பலரும் பரவிப் பணிந்தேத்தக்
கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாரும்
கடியார்சோலைக் கலவமயிலார் காரோ ணத்தாரே.
-திருஞானசம்பந்தர் (1-72-2)
பொருள்: முடிவேந்தர்கள், மான் போன்ற விழியினை உடையமகளிர், மேல் கீழ் நடு என்னும் மூவுலக மக்கள், தேவர், முனிகணங்கள், பவளம் போன்ற வாயினை உடைய அரம்பையர் முதலானோர் பலரும் பரவிப்பணிந்து போற்ற விடைக்கொடியோடு விளங்குபவர் , மாட வீதிகளை உடைய குடந்தை என்னும் திருத் தலத்தில் உள்ளதும், மணம் கமழும் சோலைகளில் தோகைகளோடு கூடிய மயில்கள் விளங்குவதும் ஆகிய காரோணத்தில், இளமை பொருந்தியவராய் இலங்கும் இறைவர் ஆவர்
No comments:
Post a Comment