தினம் ஒரு திருமுறை
புலர்ந்தகால் பூவு நீருங் கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயி னூலால் வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை யரைய னாக்கிச் சீர்மைக ளருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி யடிக ளாரே.
வலஞ்செய்து வாயி னூலால் வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை யரைய னாக்கிச் சீர்மைக ளருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி யடிக ளாரே.
-திருநாவுக்கரசர் (4-70-2)
பொருள்: பொழுது புலர்ந்த அளவில் பூவும் அபிடேக தீர்த்தமும் கொண்டு திருவடியை வணங்க இயலாத பிறப்பினதாகையாலே , பெருமானைச் சுற்றி வலமாக வந்து தன் வாயிலிருந்து சுரக்கும் நூலினாலே வட்டமாகப் பந்தலை அமைத்து வழிபட்ட சிலந்தியை அரசனாக்கி , எல்லா நலன்களையும் அருளிய ஆற்றலுடையவராவர் யார் எனில் அழகு விளங்கும் சோலைகளால் சூழப்பட்ட நனிபள்ளிப்பெருமான் ஆவார் .
No comments:
Post a Comment