தினம் ஒரு திருமுறை
சுற்று மூர்சுழி யல்திருச் சோபுரந் தொண்டர்
ஒற்று மூரொற்றி யூர்திரு வூற லொழியாப்
பெற்ற மேறிபெண் பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர்
எற்ற மூரெய்த மானிடை யாறிடைமருதே.
ஒற்று மூரொற்றி யூர்திரு வூற லொழியாப்
பெற்ற மேறிபெண் பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர்
எற்ற மூரெய்த மானிடை யாறிடைமருதே.
-சுந்தரர் (7-31-2)
பொருள்: அடி யார்கள் சூழும் ஊராகிய சுழியல், சோபுரம், ஒற்றியூர் , ஊறல் , பெண்ணையாற்றின் தெளிவாகிய நீர் மோதுகின்ற இடையாறு , இடைமருது என்னும் இவ்வூர்களை இடபத்தை ஒழியாது ஏறுகின்றவனும் பெண்ணினைக் கொண்ட பாதி உடம்பை உடையவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது இடமாகும்.
No comments:
Post a Comment