தினம் ஒரு திருமுறை
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.
-திருமூலர் (10-11-1)
பொருள்: நல்ல மனைவி தன் இல்லத்தில் இருக்க அவளை விடுத்துப் பிறன் இல்லத்துள் இருக்கின்ற மனைவியைக் கூடுதற்கு விரும்பு கின்றது , தனது தோட்டத்தில் காய்த்துக் கனிந்துள்ள பலாப் பழத்தை உண்ண விரும்பாமல், அயலான் தோட்டத்து ஈச்சம்பழத்தை உண்பதற்குக் களவினை மேற்கொண்டு துன்புறுந்தன்மை போல்வதாம்.
No comments:
Post a Comment