தினம் ஒரு திருமுறை
ஊனமுது கல்லையுடன்
வைத்திதுமுன் னையின்நன்றால்
ஏனமொடு மான்கலைகள்
மரைகடமை யிவையிற்றில்
ஆனவுறுப் பிறைச்சியமு
தடியேனுஞ் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்ததிது
தித்திக்கும் எனமொழிந்தார்.
வைத்திதுமுன் னையின்நன்றால்
ஏனமொடு மான்கலைகள்
மரைகடமை யிவையிற்றில்
ஆனவுறுப் பிறைச்சியமு
தடியேனுஞ் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்ததிது
தித்திக்கும் எனமொழிந்தார்.
-கண்ணப்ப நாயனார் புராணம் (150)
பொருள்: மாமிச அமுதை இறைவனின் திருமுன்னிலையில் வைத்து, எம் ஐயனே! இது முன்னை நாளில் எடுத்து வந்ததினும் நன்றாகும், பன்றியுடன் மான் கலைகள், காட்டுப்பசு ஆகிய இவை களின் நல்லுறுப்புகளின் இறைச்சியும் உள்ளது, அடியேனும் சுவை பார்த்தேன், அத்துடன் தேனும் இவற்றுடன் கலந்துள்ளது, தித்திக்கும், என மொழிந்தார்.
No comments:
Post a Comment