தினம் ஒரு திருமுறை
பீலிகை யிடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி யேத்துந் திருவையா றமர்ந்த தேனோ
டாலியா வெழுந்த நெஞ்ச மழகிதா வெழுந்த வாறே.
வாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி யேத்துந் திருவையா றமர்ந்த தேனோ
டாலியா வெழுந்த நெஞ்ச மழகிதா வெழுந்த வாறே.
-திருநாவுக்கரசர் (4-39-2)
பொருள்: மயிற்பீலியைக் கையில் கொண்டு அச் செயலையே பெரிய தவமாகக் கருதி , ஆடை இல்லாமல் இருந்த என்னை அறிவுகெட்ட சமணர்கள் என் பயனை அனுபவித்தார்கள் ? தூய அறிவினை உடையவர்கள் வணங்கித்துதிக்கின்ற திருவையாற்றை உகந்தருளி இருக்கின்ற தேன் போன்ற பெருமானோடு கூடிக் களிக்கும் அடியேன் உடைய நெஞ்சம் உண்மையில் அழகிதாகவே எழுந்தியல்லாதாகிறது .
No comments:
Post a Comment