தினம் ஒரு திருமுறை
பொருட்டிரு மறைகள் தந்த
புனிதரை இனிதக் கோயில்
மருட்டுறை மாற்று மாற்றால்
வழிபடுந் தொழில ராகி
இருட்கடு வொடுங்கு கண்டத்
திறையவர்க் குரிமை பூண்டார்க்
கருட்பெருந் தொண்டு செய்வார்
அவர்எறி பத்த ராவார்.
புனிதரை இனிதக் கோயில்
மருட்டுறை மாற்று மாற்றால்
வழிபடுந் தொழில ராகி
இருட்கடு வொடுங்கு கண்டத்
திறையவர்க் குரிமை பூண்டார்க்
கருட்பெருந் தொண்டு செய்வார்
அவர்எறி பத்த ராவார்.
- எறிபத்த நாயனார் புராணம் (6)
பொருள்: அழகிய மறைகளை அருளிச் செய்த புனிதர் சிவபெருமானை, இனிதாக அக்கோயிலில், உலகியல் உணர்விற்கு ஏதுவாகிய மயக்க நெறிகளை நீக்குமாற்றால் வழிபாடு செய்கின்ற தொழிலை உடையவராய், கருநிறமுடைய நஞ்சு சேர்ந் திருக்கும் திருமிடற்றையுடைய முதல்வராகிய சிவபெருமானுக்கு உரிமையாகிய, அடிமை பூண்ட அன்பர்க்குத் தாம் கொண்ட அருள் நிறைந்த பெரிய திருத்தொண்டைச் செய்து வருகின்ற அடியவர் ஒருவர்; அவர் எறிபத்த நாயனார் என்பவராவர்.
No comments:
Post a Comment