தினம் ஒரு திருமுறை
பரவுகொப் பளித்த பாடல் பண்ணுடன் பத்த ரேத்த
விரவுகொப் பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து
இரவுகொப் பளித்த கண்ட ரேத்துவா ரிடர்க டீர்ப்பார்
அரவுகொப் பளித்த கைய ரதிகைவீ ரட்ட னாரே.
விரவுகொப் பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து
இரவுகொப் பளித்த கண்ட ரேத்துவா ரிடர்க டீர்ப்பார்
அரவுகொப் பளித்த கைய ரதிகைவீ ரட்ட னாரே.
- திருநாவுக்கரசர் (4-24-9)
பொருள்: வாழ்த்துப்பாடல்களை பண்ணுடன் பாடி அடியவர்கள் போற்ற , சடைமுடியில் கலந்து தங்குதற்கு மகிழும் கங்கையைத் தம் விரிந்த சடையில் மகிழுமாறு வைத்து , இருள் கம்மிக் கறுத்த நீலகண்டராய் , தம்மை வழிபட்டுப் புகழ்பவர்களின் துயரங்களைத் தீர்ப்பவராய் , பாம்பு மகிழ்ந்து ஆடும் கையினராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .
No comments:
Post a Comment