தினம் ஒரு திருமுறை
பவளமே மகுடம் பவளமே திருவாய்
பவளமே திருவுடம் பதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல்
தவளமே முறுவல்ஆ டரவந்
துவளுமே கலையும் துகிலுமே யொருபால்
துடியிடை இடமருங் கொருத்தி
அவளுமே ஆகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
பவளமே திருவுடம் பதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல்
தவளமே முறுவல்ஆ டரவந்
துவளுமே கலையும் துகிலுமே யொருபால்
துடியிடை இடமருங் கொருத்தி
அவளுமே ஆகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
- கருவூர்த்தேவர் (9-9-5)
பொருள்: சிவபெருமானுடைய சடையும் திருவாயும் திரு வுடம்பும் பவளம் போலச் செய்யன. உடம்பில் பூசிய திருநீறும் அணிந்த புரிநூலும் பற்களும்வெண்ணிறத்தன. பாம்புகள் நெளிகின்றன. ஒரு புறம் புலித்தோல் ஆடை; ஒருபுறம் நல்ல ஆடை. இடப்பகுதியாகத் துடிபோன்றஇடையை உடைய ஒப்பற்ற வளாகியபார்வதியும் இருப்பாள். இவையாவும் உண்மையாவது போல அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சரம் ஆகும்.
No comments:
Post a Comment