தினம் ஒரு திருமுறை
அண்டத் தண்டத்தின் அப்புறத்
தாடும் அமுதன்ஊர்
தண்டந் தோட்டந்தண் டங்குறை
தண்டலை யாலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப்
பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக்
கைநாட்டுக் குறுக்கையே.
தாடும் அமுதன்ஊர்
தண்டந் தோட்டந்தண் டங்குறை
தண்டலை யாலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப்
பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக்
கைநாட்டுக் குறுக்கையே.
- சுந்தரர் (7-12-2)
பொருள்: இந்த அண்டத்திற்கு அப்பால் உள்ள அண்டங்களுக்கும் அப்பால் நின்று நடனம் ஆடுகின்ற அமுதமாய் உள்ள இறைவனது தலங்கள் , தண்டந்தோட்டம் , தண்டங்குறை , தண்டலை , ஆலங்காடு , கடல் முள்ளியும் தாழையும் சூழ்ந்த கழிப்பாலை , கடற்கரை , கொண்டல் நாட்டிலுள்ள கொண்டல் , குறுக்கை நாட்டிலுள்ள குறுக்கை ஆகும் .
No comments:
Post a Comment